நான் கேப்டனாக ஆன பிறகு இவங்க மூன்னு பேரும் எனக்கு மெசேஜ் பண்ணாங்க ! - சஞ்சு சாம்சன் பேட்டி 1

14ஆவது ஐபிஎல் சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சீசனில் 8 அணிகளும் புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்து பலமாக உள்ளது.

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் மும்பையில் மோதுகிறது. 

நான் கேப்டனாக ஆன பிறகு இவங்க மூன்னு பேரும் எனக்கு மெசேஜ் பண்ணாங்க ! - சஞ்சு சாம்சன் பேட்டி 2

இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக வீரர்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பிசிசிஐ கடுமையான பயோ பப்புள் விதிமுறைகளை விதித்து இருக்கிறது.

மற்றொரு பக்கம் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் அனைவரும் அனைத்து அணிகளுக்கும் உரிய ஆலோசனைகளை கூறி வருகின்றனர். இந்நிலையில், ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தற்போது கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

நான் கேப்டனாக ஆன பிறகு இவங்க மூன்னு பேரும் எனக்கு மெசேஜ் பண்ணாங்க ! - சஞ்சு சாம்சன் பேட்டி 3

ஸ்டீவ் ஸ்மித்துக்கு பதிலாக ராஜஸ்தான் அணியில் விளையாடி வந்த கேரள வீரர் சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. சஞ்சு சாம்சன் ரஞ்சி கோப்பையில் கேரளா அணிக்கு கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார். இதில் சிறப்பாக செயல்பட்டு கேரளா அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத் தந்தார். இதன் காரணமாகவே இவருக்கு ராஜஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

நான் கேப்டனாக ஆன பிறகு இவங்க மூன்னு பேரும் எனக்கு மெசேஜ் பண்ணாங்க ! - சஞ்சு சாம்சன் பேட்டி 4

சமீபத்தில் சஞ்சு சாம்சன் அளித்த பேட்டி ஒன்றில் “நான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பு ஏற்றதில் மகிழ்ச்சி. நான் கண்டிப்பாக எனது கடமையை செய்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்பேன். என்னை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் என்று அறிவித்தபோது மாகி பாய், ரோஹித் பாய் மற்றும் கோலி பாய் இவங்க மூன்று பேரும் எனக்கு வாழ்த்து மெசேஜ் அனுப்பி இருந்தனர். இதை கண்டு நான் மகிழ்ச்சி அடைந்தேன்”   என்று கூறியிருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *