Cricket, India, IPL, IPL 2018, RCB, RCB Squad
கிறிஸ் கெய்லை கழட்டிவிட்டது மிகப்பெரும் முட்டாள் தனம் ; சேவாக் காட்டம்

இந்த வருட ஐ.பி.எல் தொடருக்கான பெங்களூர் அணியில் இருந்து கிறிஸ் கெய்ல் கழட்டிவிடப்பட்டது முட்டாள் தனமான செயல் என்று இந்திய கிரிக்கெட் அணியின் சேவாக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாத இறுதியில் துவங்க உள்ளது.

சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.

கிறிஸ் கெய்லை கழட்டிவிட்டது மிகப்பெரும் முட்டாள் தனம் ; சேவாக் காட்டம் !! 1

இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இதற்காக ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி, ரெய்னா மற்றும் ஜடேஜாவை தக்க வைத்து கொண்டது.

கிறிஸ் கெய்லை கழட்டிவிட்டது மிகப்பெரும் முட்டாள் தனம் ; சேவாக் காட்டம் !! 2

இதே போல் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, தனது அணியில் கோஹ்லி, டிவில்லியர்ஸ் மற்றும் சர்பராஸ் கானை  தக்க வைத்து கொண்டு, கிறிஸ் கெய்ல் உள்ளிட்ட முன்னணி வீரர்களை கழட்டிவிட்டது. பெங்களூர் அணியின் இந்த முடிவு பெங்களூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்து.

இந்நிலையில் பெங்களூர் அணியின் இந்த முடிவு தனக்கு அதிர்சியளித்ததாகவும், இது பெங்களூர் அணியின் முட்டாள் தனமான முடிவு என்று இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

கிறிஸ் கெய்லை கழட்டிவிட்டது மிகப்பெரும் முட்டாள் தனம் ; சேவாக் காட்டம் !! 3

இது குறித்து பேசிய சேவாக் “ டி.20 ஸ்பெலிஸ்டான சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெய்லின் வயதை கருத்தில் கொண்டு பெங்களூர் அணி இந்த முடிவை எடுத்துள்ளதாக நினைக்கிறேன், ஆனால் பெங்களூர் அணியின் இந்த முடிவு சுத்த முட்டாள் தனமானது, இதற்காக பெங்களூர் அணி நிச்சயம் வருந்தும் நிலை ஏற்படும், மீண்டும் இவருக்காக ஏலத்திலும் போட்டி போடும் நிலையும் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

கிறிஸ் கெய்லை கழட்டிவிட்டது மிகப்பெரும் முட்டாள் தனம் ; சேவாக் காட்டம் !! 4

அதே போல் சர்வதேச கிரிக்கெட்டில் கூட பட்டையை கிளப்பி வரும் சாஹல் உள்ளிட்ட வீரர்களை கூட பெங்களூர் அணி ஏன் விடுவித்தது என்று தெரியவில்லை. வீரர்களுக்கான ஏலத்தில் RTM கார்ட்டை பயன்படுத்தி சாஹலை பெங்களூர் அணி மீண்டும் எடுத்து கொள்வதே புத்திசாலி தனமாக இருக்கும் என்றும் சேவாக் தெரிவித்துள்ளார்.

வீரர்களுக்கான ஏலம் வரும் 27 மற்றும் 28ம் தேதி பெங்களூரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published.