நடராஜனின் வரவேற்பை கண்டு வாயடைத்து போன சேவாக் ; என்ன சொல்லியிருக்கார் பாருங்க ! 1

நடராஜனின் வரவேற்பை கண்டு வாயடைத்து போன சேவாக் ; என்ன சொல்லியிருக்கார் பாருங்க !

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடரை 2 – 1 என கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் தொடரில் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்டில் இந்திய அணி வெறும் 36 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை 4-0  என இழந்து விடும் என்று முன்னாள் வீரர்கள் பலர் விமர்சனம் செய்தனர்.

ஆனால் மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பெற்ற அதிரடி வெற்றியால் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1  என கைப்பற்றி விமர்சனம் செய்த அனைவருக்கும் தக்க பதிலடி கொடுத்தது.

நடராஜனின் வரவேற்பை கண்டு வாயடைத்து போன சேவாக் ; என்ன சொல்லியிருக்கார் பாருங்க ! 2

இந்திய அணியின் இந்த வரலாற்று வெற்றியையும் சீனியர் வீரர்கள் இல்லாத போது அவர்களுக்கு பதிலாக சிறப்பாக விளையாடி இளம் வீரர்களையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில்,  ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் முடித்து நாடு திரும்பிய இந்திய வீரர்களை இந்திய ரசிகர்கள் மேளதாளங்களுடன் வரவேற்றனர். இதில் இந்திய கேப்டன் ரஹானே மற்றும் தமிழக வீரர் தங்கராஜ் நடராஜன் ஆகியோரின் வரவேற்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடராஜனின் வரவேற்பை கண்டு வாயடைத்து போன சேவாக் ; என்ன சொல்லியிருக்கார் பாருங்க ! 3

ஐபிஎல் தொடர் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று விதமான போட்டிகளிலும் அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடராஜன்.

இவர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 2 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு நடராஜன் தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு நேற்று வந்தடைந்தார். ஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய நடராஜனை ஊர் பொதுமக்கள் அனைவரும் இணைந்து கோலாகலமாக வரவேற்று இருக்கின்றனர்.

நடராஜனின் வரவேற்பை கண்டு வாயடைத்து போன சேவாக் ; என்ன சொல்லியிருக்கார் பாருங்க ! 4

நடராஜனின் வரவேற்பு குறித்து விரேந்திர சேவாக் ஒரு ட்வீட் செய்திருக்கிறார். இவரது இந்த ட்விட் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதில் சேவாக் “இதுதான் இந்தியா. இங்கு கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு மட்டுமல்ல. அதற்கும் மேலானது. சேலம் மாவட்டத்திலுள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தில் நடராஜனின் வரவேற்பு பிரம்மாண்டமாக இருந்தது. நடராஜனின் கதை சுவராசியமாக இருக்கிறது” ட்வீட் செய்திருக்கிறார். 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *