தரமான செய்கை செய்த ஷாருக் கான்... கடைசி பந்தில் சிக்ஸர் விளாசிய வீடியோ !! 1

சையத் முஸ்தாக் அலி தொடரின் இறுதி போட்டியில் கர்நாடகத்தை வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கியுள்ளது.

உள்ளூர் டி.20 தொடரான சையத் முஸ்தாக் அலி தொடர் கடந்த 4ம் தேதி துவங்கியது. இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்ற இந்த தொடரின் அரையிறுதி சுற்று முடிவில் தமிழநாடு அணியும், கர்நாடகா அணியும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

சாம்பியனை தீர்மானிக்கும் இறுதி போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. கர்நாடகா அணியில் அதிகபட்சமாக அபினவ் மனோகர் 46 ரன்களும், பிரவீன் துபே 33 ரன்களும் எடுத்தனர்.

தரமான செய்கை செய்த ஷாருக் கான்... கடைசி பந்தில் சிக்ஸர் விளாசிய வீடியோ !! 2

தமிழ்நாடு அணியில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு துவக்க வீரர்களான ஜெகதீஷன் 41 ரன்களும், ஹரி நிஷாந்த் 23 ரன்களும் எடுத்து கொடுத்தனர். இதன்பின் களமிறங்கிய மிடில் ஆர்டர் வீரர்கள் சற்று சொதப்பியதால் தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவரில் சாய் கிஷோர் முதல் நான்கு பந்தில் 8 ரன்கள் எடுத்து கொடுத்தன் மூலம் கடைசி ஒரு பந்திற்கு 5 ரன் தேவை என்ற நிலை ஏற்பட்டது, கடைசி பந்தை எதிர்கொண்ட ஷாருக் கான் மிரட்டல் சிக்ஸர் விளாசி தமிழ்நாடு அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.

கடைசி பந்தில் ஷாருக் கான் சிக்ஸர் விளாசிய வீடியோ இங்கே;

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *