தென் ஆப்பிரிக்காவில் நடக்கவிருக்கும் உள்ளூர் போட்டிகளில் ஷாருகான் ஒரு அணியை வாங்க உள்ளார் 1

இந்தியாவின் சிறந்த நடிகரான ஷாருக்கான் உலகம் முழுவதும் பிரபலம் ஆனவர். சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த ஒரு நடிகர் என்றால் அது ஷாருக்கான் தான்.

இவர் சினிமாவில் கலக்குவது மட்டும் இன்றி கிரிக்கெட் போட்டிகளில் அணிகளை வாங்கி அதிலும் கலக்கி கொண்டு இருக்கிறார், இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல் தொடரில் ஷாருக்கான் கொல்கத்தா அணியை வாங்கி ஐபிஎல் இல் கலக்கி கொண்டு இருக்கிறார் இது மட்டுமின்றி வெஸ்ட் இந்தியன்ஸ் நாட்டிலும் ஒரு அணியை வாங்கியுள்ளார்.

இந்தியா வெஸ்ட் இந்தியன்ஸ் என இரண்டு நாட்டிலும் ஒரு ஒரு அணியை வாங்கிய இவர் தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடக்கவிருக்கும் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ஒரு அணியை வாங்க போகிறாராம்.இதுகுறித்து தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இதற்கிடையில், தென் ஆப்பிரிக்காவில் நடவிருக்கும் புது டி20 போட்டிகள் நவம்பர் மாதம் துடங்கி டிசம்பர் மாதம் இறுதியில் முடியும் என கூறியுள்ளார்கள்.

இந்த போட்டிகளில் சிறந்து விளங்கும் பிரபல கிரிக்கெட் போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள் கிறிஸ் கெய்ல், பிராவோ, பொல்லார்ட் மேலும் நிறைய வீரர்கள் இதில் இடம் பெற உள்ளார்கள்.

எனவே இந்தியா, வெஸ்ட் இந்தியன்ஸ் மட்டும் இன்றி தென் ஆப்பிரிக்காவிலும் ஒரு பலம் வாய்ந்த டி20  அணியை ஷாருக்கான் தனக்கு சொந்தமாக விரைவில் வாங்குவர்.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *