ஷமி, சிராஜ் மற்றும் ஜடேஜா ஆகியோரின் அபாரமான பந்துவீச்சால் ஆஸ்திரேலியா அணி 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் ஒருநாள் போட்டி மும்பையில் உள்ள வான்கடை மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
அதன்பிறகு உள்ளே வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், மிச்சல் மார்ஷ் உடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கொரை உயர்த்தினார். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 72 ரன்கள் சேர்த்தனர். நல்ல துவக்கம் பெற்ற ஸ்டீவ் ஸ்மித் 30 பந்துகளில் 22 ரன்கள் அடித்திருந்தபோது, ஹர்திக் பாண்டியா பந்தில் கேஎல் ராகுலின் அபாரமான கேட்ச் மூலம் அவுட்டானார்.

இந்திய மைதானங்களில் நன்றாக விளையாட முடியும் என்று முந்தைய டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் காட்டிய கேமரூன் கிரீன் மீது ஆஸ்திரேலிய அணி நம்பிக்கையுடன் இருந்தது. ஆனால் ஆட்டத்தின் 30வது ஓவரை ஷமி வீசியபொது எதிர்கொண்ட கிரீன், பந்து எங்கே வருகிறது என கணிக்காமல் கதிகலங்கி, க்ளீன் போல்ட் ஆனார். இவர் 12 ரன்கள் மட்டுமே அடித்து அவுட்டானார்.
அடுத்துவந்த மேக்ஸ்வெல்(8), ஸ்டாயினீஸ்(5) இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். ஒருகட்டத்தில் 128 ரன்களுக்கு வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த ஆஸ்திரேலிய அணி, 300 முதல் 350 ரன்கள் வரை அடிப்பார்கள் என்ற கணிப்பு நிலவியது.
தவறான நேரத்தில் மிட்சல் மார்ஷ் விக்கெட்டை இழந்தபின் வரிசையாக விக்கெட்ஸ் விட்டு, 35.4 ஓவர்களில் 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 8 வீரர்கள் வரை கடப்பாரை பேட்டிங் வைத்திருந்தும் அணி இப்படி கொத்துக்கொத்தாக விக்கெட் விட்டது பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
இந்திய அணிக்காக அபாரமாக பந்துவீசிய சிராஜ் மற்றும் ஷமி இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும் ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் தலா 1 விக்கெட் எடுத்திருந்தார்கள்.