சென்னையால் முடியுமா..? இந்த நான்கு அணிகள் தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்; சேன் வார்னே உறுதி !! 1

சென்னையால் முடியுமா..? இந்த நான்கு அணிகள் தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்; சேன் வார்னே உறுதி

நடப்பு ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ள நான்கு அணிகள் எது என்பது குறித்தான தனது கணிப்பை முன்னாள் வீரர் சேன் வார்னே ஓபனாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரின் 13வது சீசன் கடந்த 19ம் தேதி துவங்கியது. நாளுக்கு நாள் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்களின் மிகப்பெரும் ஆதரவு இந்த தொடருக்கும் கிடைத்துள்ளது.

சென்னையால் முடியுமா..? இந்த நான்கு அணிகள் தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்; சேன் வார்னே உறுதி !! 2

துபாயில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 12 போட்டிகள் நிறைவடைந்துள்ளது. நாளுக்கு நாள் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த தொடர் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் நாள்தோறும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனுமான சேன் வார்னே இந்த தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ள நான்கு அணிகள் எது எது என்பது குறித்தான தனது கணிப்பை ஓபனாக தெரிவித்துள்ளார்.

சென்னையால் முடியுமா..? இந்த நான்கு அணிகள் தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்; சேன் வார்னே உறுதி !! 3

இது குறித்து சேன் வார்னே கூறுகையில், “ ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நிச்சயம் இடமுண்டு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கடந்து செல்வது கடினமானது என்று நினைக்கிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் எப்போதும் பிளே ஆஃப்ஸ் சுற்றில் இருக்கும். அல்லது இருந்திருக்கும்.

சென்னையால் முடியுமா..? இந்த நான்கு அணிகள் தான் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்; சேன் வார்னே உறுதி !! 4

மும்பை இந்தியன்ஸ் அணியும் தகுதி பெறும். அவர்கள் மிகவும் பேலன்ஸ் அணியை கொண்டுள்ளனர். அடுத்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை நோக்கி சார்ந்திருக்க வேண்டும். ஏராளமான பையர்பவர் பெற்றுள்ளது. ஆகவே, 4-வது அணியாக அது இருக்கும்’’ என்றார்.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *