ஸ்மித் மற்றும் வார்னர் இருவரும் அணியில் இருந்தால் ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வெல்லும் - சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் கருத்து 1
MELBOURNE, AUSTRALIA - DECEMBER 09: Steve Smith and David Warner of Australia pose with the trophy after winning game three of the One Day International series between Australia and New Zealand at Melbourne Cricket Ground on December 9, 2016 in Melbourne, Australia. (Photo by Scott Barbour - CA/Cricket Australia/Getty Images)

ஸ்மித் மற்றும் இருவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு செல்லும் ஆஸ்திரேலியா அணியில் இடம்பிடித்தால், ஆஸ்திரேலியா அணி உலகக்கோப்பையை நிச்சயம் வெல்லும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு ஆண்டாக கடும் சோதனைகளை சந்தித்து வரும் ஸ்டீவ் ஸ்மித்தின் தடை காலம் நிறைவடைய உள்ள நிலையில், ஸ்டீவ் ஸ்மித்தும் வலைபயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் வலைபயிற்சிக்கு திரும்பியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், வார்னர் மற்றும் ஸ்மித் ஐபிஎல் போட்டிகளுக்கு முன் உடல்தகுதி பெற்றுவிடுவார்கள் என்று தெரிவித்தார். இவர்கள் இருவரும் இடம்பெற்றுள்ள அணிகள் மோதும் ஆட்ட தினம் அன்று இவர்களின் தடைக்காலம் முடிவதால் அவர்கள் ஐபிஎல் தொடருக்கு திரும்புவார்கள் என்று கூறினார். மார்ச் 29 நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

ஸ்மித் மற்றும் வார்னர் இருவரும் அணியில் இருந்தால் ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வெல்லும் - சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் கருத்து 2

பங்களாதேஷ் ப்ரீமியர் போட்டிகளின் போது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்மித் தொடரிலிருந்து விலகினார். காயத்திலிருந்து மீண்டு முதல் ஷாட்டை ஆடுகிறேன் என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஸ்மித் வார்னர் அணிக்கு திரும்புவார்கள் – பயிற்சியாளர் 

ஸ்மித் மற்றும் வார்னர் இருவரும் அணியில் இருந்தால் ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வெல்லும் - சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் கருத்து 3

பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்காக ஓராண்டு தடைபெற்ற இருவரின் தடைக்காலம் மார்ச் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் மீண்டும் அணித்தேர்வுக்கு பரிந்துரைகப்படுவார்கள் என்று கூறப்படுள்ளது.

பயிற்சியாளர் லாங்கர் கூறுகையில், “நான் அவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறேன். அவர்கள் ஐபிஎல் தொடருக்கு திரும்பிவிடுவார்கள். அடுத்த மாதம் யூஏஇயில் நடக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கு திரும்ப வாய்ப்புள்ளது” என்று கூறினார்.

உலகக் கோப்பைகான அணியிலும் அவர்கள் தங்களை நிரூபித்தி இடம்பெற வாய்ப்புள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தார் லாங்கர்.

ஷேன் வார்னே கருத்து

ஸ்மித் மற்றும் வார்னர் இருவரும் அணியில் இருந்தால் ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வெல்லும் - சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் கருத்து 4
Rajasthan Royals team Mentor Shane Warne speaks during the unveiling of Rajasthan Royals team jersey for the IPL-2018 T20 matches in Jaipur, Rajasthan, India on 5th April,2018.(Photo By Vishal Bhatnagar/NurPhoto via Getty Images) (Photo by Vishal Bhatnagar/NurPhoto via Getty Images)

காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் இருவரும் மீண்டும் அணியில் மீண்டும் திரும்பி, உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்தால் நிச்சயம் ஆஸ்திரேலியா அணி இம்முறையும் கோப்பையை வெல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும்  இல்லை என சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *