இப்படி ஒரு வீரரா ! இந்திய அளவில் சாதனை படைத்த கேரளா வீரரை புகழ்ந்த சேவாக் ! 1

இப்படி ஒரு வீரரா ! இந்திய அளவில் சாதனை படைத்த கேரளா வீரரை புகழ்ந்த சேவாக் !

முகமது அசாருதீன் 37 பந்துகளில் சதம் விளாசி டி20 தொடரில் குறைந்த பந்தில் சதம் விளாசிய 2வது இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.

உள்ளூர் 20 ஓவர் கோப்பை தொடரான சையது முஷ்டாக் அலி கோப்பை தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த டி20 தொடரில் 38 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகிறது. இந்த உள்ளூர் டி20 தொடர் ஜனவரி 10ம் தேதியில் இருந்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

இப்படி ஒரு வீரரா ! இந்திய அளவில் சாதனை படைத்த கேரளா வீரரை புகழ்ந்த சேவாக் ! 2

இந்த 38 அணிகளை எலைட் குரூப் ஏ, பி, சி, டி, ஈ மற்றும் பிளேட் குரூப் என ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி ஐபிஎல் தொடரில் இடம்பெற ஒவ்வொரு வீரர்களும் விரும்புவார்கள். இந்த தொடரில் இந்திய வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஶ்ரீசாந்த், தினேஷ் கார்த்திக் என பலர் கலந்து விளையாடி வருவதால் இந்த தொடரை அனைவரும் விரும்பி கண்டுகளித்து வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த 13ம் தேதி ஈ குரூப் மும்பையில் நடைபெற்ற சையத் முஷா அலி டி20 தொடரில் கேரளா அணியும் மும்பை அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற கேரளா அணி முதல் பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 196ரன்கள் குவித்தனர். இதையடுத்து களமிறங்கிய கேரளா அணி 15.5 ஓவரில் 201 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு காரணமாக கேரளா அணியின் அதிரடி பேட்ஸ்மன் முகமது அசாருதீன் 37 பந்துகளில் சதம் விளாசினார்.

இப்படி ஒரு வீரரா ! இந்திய அளவில் சாதனை படைத்த கேரளா வீரரை புகழ்ந்த சேவாக் ! 3

தொடர்ந்து விளையாடிய இவர் 54 பந்துகளில் 137 ரன்கள் ( 9 பவுண்டரிகள், 11 சிக்ஸர்கள்) குவித்து நாட் அவுட்டில் இருக்கிறார். இதன்மூலம் இவர் டி20 தொடரில் குறைந்த பந்தில் சதம் விளாசிய 2வது இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். இவரது இந்த அதிரடியாக ஆட்டத்திற்கு அனைவரும் பாராட்டு தெறிவித்து வந்தனர். அந்தவகையில் இந்திய முன்னாள் வீரர் சேவாக் “மும்பை போன்ற மிகப்பெரிய அணிக்கு எதிராக இந்த சாதனையை படைத்தது சாதரணமில்லை. நான் இந்த ஆட்டத்தை ரசித்தேன்” என்று ட்விட் செய்துள்ளார். 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *