நூறாவது போட்டியில் நூறு போட்ட ஷிகர் தவான் !! 1

நூறாவது போட்டியில் நூறு போட்ட ஷிகர் தவான்

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடனான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற இழந்த நிலையில், தற்போது இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் மூன்று போட்டிகளிலும், ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்திய இந்திய அணி, தொடரிலும் 3-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி ஜோஹன்ஸ்பெர்க் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

நூறாவது போட்டியில் நூறு போட்ட ஷிகர் தவான் !! 2
India celebrate the wicket of South Africa’s Hashim Amla during their ODI between South Africa and India at the Kingsmead Stadium Durban, South Africa, Thursday, Feb. 1 2018. (AP Photo/Anesh Dikeby)

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 5 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த கோஹ்லி – தவான் கூட்டணி வழக்கம் போல் தென் ஆப்ரிக்கா அணியின் பந்துவீச்சை சிதறடித்து மளமளவென ரன் குவித்தது.

நூறாவது போட்டியில் நூறு போட்ட ஷிகர் தவான் !! 3

போட்டியின் துவக்கம் முதலே அதிரடியாக விளையாடிய தவான், சரவதேச ஒருநாள் அரங்கில் தனது 13வது சதத்தை பதிவு செய்தார். மேலும் இன்று தனது நூறாவது ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் தவான், தனது நூறாவது போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இது மட்டுமல்லாமல் சர்வதேச அரங்கில் தனது இம்மைல்கல்லை எட்டிய 9வது வீரர் என்ற பெருமை பெற்றார் தவான்.

100வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த வீரர்கள் பட்டியல்:

வீரர்அணி

1) கார்டன் கிரீனிட்ஜ்வெஸ்ட் இண்டீஸ் – 1998

2)கிறிஸ் கிரைன்ஸ்நியூசிலாந்து   – 1999

3)யூசுப் யுகானாபாகிஸ்தான் – 2002


4)சங்ககராஇலங்கை – 2004

5)கிறிஸ் கெயில்வெஸ்ட் இண்டீஸ் – 2004

6)மார்கஸ் டிரஸ்கோதிக்இங்கிலாந்து – 2005

7)சர்வான்வெஸ்ட் இண்டீஸ் – 2006

8) டேவிட் வார்னர்ஆஸ்திரேலியா – 2017

9) தவான்இந்தியா – 2018

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *