தவான் பழைய ஃபார்மிற்கு வர இதை செய்தால் போதும் - ஆஷிஷ் நெஹ்ரா 1

தவான் கடந்த சில ஒருநாள் போட்டிகளில் மோசமான ஆடிவருவது இந்திய அணிக்கு பின்னடைவாக உள்ளது. ஆனால், அதைபொருட்படுத்தாமல் இன்னும் ஒரு போட்டியில் சிறப்பாக அவர் ஆடினால் போதும் மீண்டும் பழைய ஃபார்மிற்கு வருவதற்கு என இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபிஞ்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது.

தவான் பழைய ஃபார்மிற்கு வர இதை செய்தால் போதும் - ஆஷிஷ் நெஹ்ரா 2

இதில், தவான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். ரோஹித் சர்மா விக்கெட்டை பாதுகாத்து சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த கோலி சற்று துரிதமாக ரன் குவித்தார். இதனால், இந்திய அணியின் ரன் வேகம் சீராக உயர்ந்தது. இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் 44 ரன்கள் எடுத்திருந்த கோலி ஸாம்பா பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மா37 ரன்களுக்கும், அம்பதி ராயுடு 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 99 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்குள்ளானது.

இந்த நிலையில், தோனியுடன் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி விக்கெட்டை பாதுகாத்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதேசமயம், அவ்வப்போது பவுண்டரிகளையும் அடித்து வெற்றிக்கு தேவையான ரன் ரேட்டையும் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் செல்லாமல் பார்த்துக் கொண்டனர்.

தவான் பழைய ஃபார்மிற்கு வர இதை செய்தால் போதும் - ஆஷிஷ் நெஹ்ரா 3

இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 100 ரன்களை கடந்து இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கினர். சிறப்பாக விளையாடிய ஜாதவ் முதலில் அரைசதத்தை கடந்தார். அவரைத் தொடர்ந்து தோனியும் அரைசதத்தை கடந்தார்.

இதன்மூலம், இந்திய அணி 48.2 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 240 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

எளிதாக வெல்லவேண்டிய போட்டியை இப்படி இழுபறிக்கு கொண்டு சென்றதற்கு முக்கிய காரணம், இந்திய அணியின் துவக்கம் சரிவர அமையாதது தான், தவான் இன்னிங்ஸில் தான் சந்தித்த முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்,

மேலும், கடந்த சில போட்டிகளாகவே அவரின் துவக்கம் இந்திய அணிக்கு சாதகமான அமையவில்லை.

இந்த ஆண்டு ஒன்பது இன்னிங்ஸில் 243 ரன்களை மட்டுமே அடித்த தவான் 30 ரன்களை சராசரியாக கொண்டிருகிறார். 0, 32, 23, 75 *, 66, 28, 13, 6 இவைகள் அவர் 9 இன்னிங்சில் அடித்த ரன்கள் ஆகும். இதுவரை இரண்டு அரை சத்தங்களையும் மற்றும் இரண்டு முறை ரன் ஏதும் எடுக்காமலும் வெளியேறியுள்ளார். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை துவங்குவதற்கு முன்பு இன்னும் நான்கு ஒருநாள் போட்டிகளை கொண்ட இந்தியாவிற்கு இது ஒரு பெரிய கவலையாக இருக்கிறதா? 

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கூறுகையில்,

தவான் பழைய ஃபார்மிற்கு வர இதை செய்தால் போதும் - ஆஷிஷ் நெஹ்ரா 4

“அணியில் ராகுல் இடம்பெறுவாரா இல்லையா என்பது முக்கியம் அல்ல, யாராக இருந்தாலும் ரன்கள் எடுக்கவே முயற்சிப்பார்கள். ராகுல் டி20 போட்டியில் 50 மற்றும் 47 ரன்கள் எடுக்கவில்லை என்றால் நீங்கள் கேட்கும் கேள்விகள் வேறு மாதிரியாக இருந்திருக்கும். ஆதலால் தவான் சிறப்பாக ஆடக்கூடியவர் இன்னும் ஒரு போட்டியில் சிறப்பாக ஆடினால் போதும், அவர் பழைய நிலைக்கு திரும்பி விடுவார்” என தெரிவித்தார் நெஹ்ரா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *