ஷிகர் தவானின் பெயர் அர்ஜூனா விருதிற்கு பரிந்துரை !! 1
ஷிகர் தவானின் பெயர் அர்ஜூனா விருதிற்கு பரிந்துரை

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரரான ஷிகர் தவான்  மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா ஆகியோரின் பெயர் அர்ஜூனா விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சிறந்த விளையாட்டு வீரர், விராங்கனைகளுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த ஷிகர் தவான், ஸ்மிரிதி மந்தனா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

ஷிகர் தவானின் பெயர் அர்ஜூனா விருதிற்கு பரிந்துரை !! 2
Indian cricketer Shikhar Dhawan jogs during a practice session ahead of their second ODI cricket match against Sri Lanka in Pallekele, Sri Lanka, Wednesday, Aug. 23, 2017. (AP Photo/Eranga Jayawardena)

அர்ஜுனா விருது 1961ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைக்கும் வீரர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றோருக்கு வில்விளையாட்டில் சிறந்த வீரராக கருதப்படும் அர்ஜுனனின் வெங்கலச்சிலையோடு, ரூ. 5,00,000 மற்றும் பாராட்டுச் சுருள் கொடுக்கப்படுகிறது.

2001ஆம் ஆண்டிலிருந்து ஒலிம்பிக் விளையாட்டுகள், ஆசிய விளையாட்டுகள், காமன்வெல்த் விளையாட்டுகள், உலக கோப்பை, உலக சாதனையாளர் துறைகள், கிரிக்கெட், இந்திய பரம்பரை விளையாட்டுகள், உடல் நலிவடைந்தோர் விளையாட்டுகள் போன்ற பல்வேறு துறைகளுக்கு வழங்கப்படுகின்றன.

ஷிகர் தவானின் பெயர் அர்ஜூனா விருதிற்கு பரிந்துரை !! 3
The 21-year-old Mandhana had played a key role in India reaching the final of the ICC Women’s World Cup in England last year. Her prolific run this year has seen her grab a career-high fourth position in the ICC women’s rankings.

இந்நிலையில், இந்தாண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த ஷிகர் தவான், ஸ்மிரிதி மந்தனா ஆகியோரின் பெயர்கள் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு செட்டேஷ்வர் புஜாரா மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *