புதிய சாதனை படைத்தார் சோயிப் மாலிக்; ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்துள்ளார் !! 1

புதிய சாதனை படைத்தார் சோயிப் மாலிக்; ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்துள்ளார்

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சோயிப் மாலிக், ஜாம்பவான் சச்சின், இலங்கையின் சனத் ஜெயசூர்யா ஆகியோர் பட்டியலில் இணைந்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக திகழ்ந்த வீரர்களில் மாலிக்கும் ஒருவர். இந்நிலையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற மாலிக் தற்போது டி-20 கிரிக்கெட்டில் மட்டும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் நான்கு பத்தாண்டுகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக கிரிக்கெட் விளையாடிய முதல் வீரர் என்ற சரித்திர சாதனை படைத்தார் சோயிப் மாலிக். இதன் மூலம் இந்த சாதனையை சர்வதேச கிரிக்கெட்டில் அரங்கேற்றிய 8ஆவது வீரரானார் மாலிக். அதேபோல இந்திய ஜாம்பவான் சச்சின், இலங்கையின் சனத் ஜெயசூர்யா ஆகியோரின் பட்டியலில் இணைந்தார் மாலிக்.

புதிய சாதனை படைத்தார் சோயிப் மாலிக்; ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்துள்ளார் !! 2

கடந்த 1999இல் சார்ஜாவில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் சோயிப் மாலிக் பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமானார். தொடர்ந்து கடந்த 2001இல் முல்தானில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்டில் மாலிக் அறிமுகமானார். தனது சிறந்த உடற்தகுதி காரணமாக பாகிஸ்தான் அணிக்காக தற்போது வரை கிரிக்கெட் விளையாடியுள்ள மாலிக் தற்போதுள்ள இளம் வீரர்களுக்கு மிகச்சிறந்த முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

முன்னதாக வில்பிரட் ரோட்ஸ், டெனிஸ் பிரைன் கிளோஸ், பிராங்க் உல்லே, சச்சின், ஜாக் ஹாப்ஸ், ஜார்ஜ் கன், சனத் ஜெயசூர்யா ஆகியோர் மாலிக்கிற்கு முன்பாக சர்வதேச கிரிக்கெட்டில் நான்கு பத்தாண்டுகளில் நடந்த போட்டிகளில் விளையாடியுள்ளனர். கடந்த 2019இல் இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற மாலிக், சமீபத்தில் வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்ற பெரிதும் கைகொடுத்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *