எத பத்தியும் கவலைப்படாம விளையாடு தம்பி ; உம்ரான் மாலிக்கிர்க்கு ஆதரவாக பேசிய இஷாந்த் ஷர்மா !! 1
எத பத்தியும் கவலைப்படாம விளையாடு தம்பி ; உம்ரான் மாலிக்கிர்க்கு ஆதரவாக பேசிய இஷாந்த் ஷர்மா..

எதை நினைத்தும் உம்ரான் மாலிக் பயப்படக்கூடாது என்று உம்ரான் மாலிக்கிர்க்கு இஷாந்த் ஷர்மா அறிவுரை வழங்கியுள்ளார்.

2022 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக அறிமுகமாகி தன்னுடைய அபாரமான வேகத்தால் இந்திய அணி கால் பதித்த இந்திய அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக், அடுத்தடுத்த போட்டிகளில் தனக்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் மிக சரியாக பயன்படுத்தி தற்போது லிமிடெட் ஓவர் தொடருக்கான இந்திய அணி ரெகுலர் வீரராக திகழ்கிறார்.

எத பத்தியும் கவலைப்படாம விளையாடு தம்பி ; உம்ரான் மாலிக்கிர்க்கு ஆதரவாக பேசிய இஷாந்த் ஷர்மா !! 2

சர்வ சாதாரணமாக 150+ வேகத்தில் பந்து வீசக்கூடிய திறமை படைத்த உம்ரான் மாலிக் தான் பங்கேற்ற போட்டிகளில் எல்லாம் இந்திய அணிக்கு தேவைப்படும் நேரத்தில் விக்கெட்களை வீழ்த்தி சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக உருவாகி வருகிறார்.

இப்படி அபாரமான வேகப்பந்து வீச்சால் உலக கிரிக்கெட்டின் உச்சம் பெற்று வரும் உம்ரன் மாலிக்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் வெகுவாக பாராட்டி வருவதோடு அவருக்கு தேவையான அறிவுரைகளையும் கொடுத்து வருகின்றனர்.

எத பத்தியும் கவலைப்படாம விளையாடு தம்பி ; உம்ரான் மாலிக்கிர்க்கு ஆதரவாக பேசிய இஷாந்த் ஷர்மா !! 3

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா.,இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் ரன்களை கொடுப்பது பற்றி கவலைப்படாமல் தன்னுடைய வேகத்தில் கவனம் செலுத்தி விளையாட வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

 

இதுகுறித்து இஷாந்த் சர்மா பேசுகையில்,“ உம்ரான் மாலிக் பந்தை எந்த இடத்தில் வீசுகிறார் என்பது குறித்து கவலைப்பட வேண்டாம், அவருக்கு ஏற்படும் அனுபவம் நிச்சயம் அவருக்கு புரிய வைக்கும். அவரால் 150 அல்லது 160 KMPH வேகத்தில் பந்து வீச முடிந்தால் அதில் அவர் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் அதை நினைத்து அவர் மகிழ்ச்சி அடைய வேண்டும், அதனால் அவர் ரன் விட்டுக் கொடுப்பதை நினைத்து கவலைப்பட வேண்டாம், பந்தை வேகமாக வீசுவதால் எதிரணி பேட்ஸ்மேன்கள் தங்களுடைய கண்களை சிமிட்டாமல் பயத்துடன் எதிர்கொள்வார்கள்., இதனால் உம்ரன் மாலிக்கிடம் யாராவது ஒருவர் தன்னம்பிக்கையுடன் பேட்ஸ்மேன் கண்களுக்கு பந்து தெரியாத அளவிற்கு வேகமாக வீசவேண்டும் என அறிவுரை கொடுங்கள் என்றும்” இஷாந்த் சர்மா உம்ரான் மாலிக் குறித்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *