வந்துட்டேனு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு : ஶ்ரீசாந்த் கிரிக்கெட் 1

ஶ்ரீசாந்த் ஆடிய ஆட்டம் :

பிசிசிஐ விதித்த தடையினால் பல வருடங்களாக கிரிக்கெட் விளையாட முடியாமல் தவித்த சான்த்தகுமாரன் ஶ்ரீசாந்த் தற்போது வெளியே வந்து கிரிக்கெட் ஆடியுள்ளார். மலையால திரையுளக நட்சத்திரங்கள் நடத்திய கண்காட்சி ஆட்டத்தில் விளையாடியுள்ளார் ஶ்ரீசாந்த். இது ஒரு அதிகாரபூர்வமற்ற கண்காட்சி போட்டியாகும். மேலும் ஶ்ரீசாந்த் மலையாள திரையுளக நடிகர் சங்கத்தில் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. நிக்கி கல்ராணியுடன் ஒரு படத்திலும் நடித்துள்ளார் ஶ்ரீசாந்த்.

வந்துட்டேனு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு : ஶ்ரீசாந்த் கிரிக்கெட் 2
Kochi: Cricketer S. Sreesanth at the Kerala High Court in Kochi on Monday. The Court on Monday lifted the life ban imposed on him by the Board of Control for Cricket in India (BCCI) in the 2013 Indian Premier League (IPL) spot-fixing case. PTI Photo (PTI8_7_2017_000105A) *** Local Caption ***

அதில் பேசிய ஶ்ரீசாந்த் கூறியதாவது,

நான் எந்த மைதானத்தில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேனோ அதே மைதானத்தில் மீண்டும் துவங்கியுள்ளேன். இங்கிருந்து எப்படி இந்திய அணியை அடைந்தேனோ மீண்டும்  அதே போல் இந்திய அணியை அடைவதே என் லட்ச்சியம்.                           – ஶ்ரீசாந்த்

வந்துட்டேனு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு : ஶ்ரீசாந்த் கிரிக்கெட் 3

ஶ்ரீசாந்தை கடந்த 2013 ஆம் வருடம் செப்டம்பர் மாதம்  அனைத்து தொழில்முறை மற்றும் கிளப் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதித்தது  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் . சம்மீபத்தில் அத் தடையை நீக்கி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியதிர்க்கு உத்தரவு பிறபிக்க  ஆணை வெளியிடது கேரள உயர்நீதிமன்றம்.

ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்களை டெல்லி கோர்ட் நிரபராதிகள் என்று கூறி விடுதலை செய்தாலும் கூட அவர்கள் மீது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சிஐ)ஒழுங்கு நடவடிக்கைக் குழு எடுத்த நடவடிக்கைகள் தொடர்கின்றன என்று கிரிக்கெட் வாரியம் கூறியது. 2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நடந்த மேட்ச் பிக்ஸிங் முறைகேடுகள் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜீத் சண்டிலா ஆகியோர் உள்பட 36 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

வந்துட்டேனு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு : ஶ்ரீசாந்த் கிரிக்கெட் 4
Indian cricketer Shanthakumaran Sreesanth looks on before being taken to court in New Delhi on May 28, 2013. Sreesanth was to appear in court Tuesday, following a two-day extension of police custody given May 26. AFP PHOTO/MANAN VATSYAYANA (Photo credit should read MANAN VATSYAYANA/AFP/Getty Images)

இதில் ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் ஆகியோர் டெல்லி போலிசால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்த நிலையில் ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் ஆகியோருக்கு ஆயுள் காலத் தடை விதித்து இந்திய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது.இந்த நிலையில் 36 பேர் மீதான வழக்கு டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வந்தது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட 36 பேர் மீதான குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தனர். மேலும் அனைவர் மீதான குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றம் கைவிடுவதாகவும் அறிவித்தது.

இதையடுத்து மீண்டும் ஸ்ரீசாந்த் விளையாட அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும் தன் வழி தனி வழி என்ற கொள்கை உடைய இந்திய கிரிக் கெட் வாரியம், கோர்ட் தீர்ப்பு எப்படி இருந்தாலும் பரவாயில்லை, வாரிய முடிவு மாறாது என்று தடாலடியாக அறிவித்தது.

வந்துட்டேனு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு : ஶ்ரீசாந்த் கிரிக்கெட் 5

இதுகுறித்து இந்திய கிரிக் கெட் வாரியம்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிசிசிஐ எடுக்கும் எந்த ஒரு ஒழுங்கு நடவடிக்கை முடிவும், தன்னிச்சையானது. எந்த கிரிமினல் வழக்குகளோடும் தொடர்புடையது அல்ல. வழக்குகளின் தீர்ப்பு இதைக் கட்டுப்படுத்தாது. எனவே தற்போதைய விவகாரத்திலும் பிசிசிஐ முடிவு மாறாது. அப்படியே தொடரும் என்று என பிசிசிஐ பிடிவாதமாக அறிவித்தது.

இதனால் மகிழ்ச்சியில் இருந்தார் ஶ்ரீசாந்த். பின்னர்  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதனை எதிர்த்து முறையிட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த ஶ்ரீசாந்த் தனது ட்விட்டர் தளத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை சாடினார்.

உங்களுக்கு என்னதான் பிரச்சனை ? உங்களால் இதற்க்கு மேலும் மோசமாய் என்ன தான் செய்து விட முடியும் ? குற்றமற்ற ஒருவருக்கு மேலும் என்ன தான் கெடுதல் செய்து விட போகிறீர்கள் ? ஏன் நீங்கள் செய்கிறீர்கள் எனக் கூட எனக்கு தெரியவில்லை. என கடுமையாக பிசிசிஐ யை சாடினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *