வரலாறு படைத்துள்ளார்.... முதல் போட்டியிலேயே பல சாதனைகள் படைத்த ஸ்ரேயஸ் ஐயர் !! 1

தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அசத்திய இந்திய அணியின் ஸ்ரேயஸ் ஐயர் இதன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி கான்பூரில் நேற்று துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் தற்காலிக கேப்டனான ரஹானே முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

வரலாறு படைத்துள்ளார்.... முதல் போட்டியிலேயே பல சாதனைகள் படைத்த ஸ்ரேயஸ் ஐயர் !! 2

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு மாயன்க் அகர்வால் 13 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 52 ரன்கள் எடுத்து கொடுத்தார்.

இதன்பின் களமிறங்கிய கேப்டன் ரஹானே 35 ரன்களிலும், துணை கேப்டன் புஜாரா 26 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினாலும், அடுத்ததாக கூட்டணி சேர்ந்த ஸ்ரேயஸ் ஐயர் – ஜடேஜா ஜோடி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்டு விளையாடியதன் மூலம் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 258 ரன்கள் எடுத்திருந்தது.

வரலாறு படைத்துள்ளார்.... முதல் போட்டியிலேயே பல சாதனைகள் படைத்த ஸ்ரேயஸ் ஐயர் !! 3

இரண்டாம் நாளான இன்றைய ஆட்டம் துவக்கம் துவங்கிய சில நிமிடங்களில் ஜடேஜா (50) டிம் சவுத்தியின் பந்தில் ஸ்டெம்பை பறிகொடுத்து வெளியேறினார். ஜடேஜா விக்கெட்டை இழந்த பின்பும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயஸ் ஐயர் 157 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் சதம் அடித்து அசத்தினார்.

வரலாறு படைத்துள்ளார்.... முதல் போட்டியிலேயே பல சாதனைகள் படைத்த ஸ்ரேயஸ் ஐயர் !! 4

இந்த போட்டியின் மூலம் இந்திய டெஸ்ட் அணியில் கால் பதித்த ஸ்ரேயஸ் ஐயர், தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்திருப்பதன் மூலம் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் தங்களது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான்களான அசாரூதீன், சேவாக் போன்ற வீரர்களுடன் 16வது வீரராக இடம்பெற்றுள்ளார்.

அறிமுக போட்டியிலேயே சதம் அடித்துள்ள இந்திய வீரர்கள்;

லாலா அமர்நாத் – 118

தீபக் சோடான் – 110

கிரீபல் சிங் – 100*

அலி பைக் – 112

ஹனுமந்த் சிங் – 105

குண்டப்பா விஸ்வநாத்– 137

சூரேந்தர் அமர்நாத் – 124

முகமது அசாருதீன் – 110

பிரவீன் அம்ரே – 103

சவுரவ் கங்குலி – 131

விரேந்தர் சேவாக் – 105

சுரேஷ் ரெய்னா – 120

ஷிகர் தவான் – 187

ரோஹித் சர்மா – 177

ப்ரித்வி ஷா – 134

ஸ்ரேயஸ் ஐயர் – 105

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *