இந்திய - இலங்கை தொடரில் இருந்து மேலும் ஒரு இந்திய வீரர் விலகல்! 1

இலங்கைக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கு பெறப் போவதில்லை

கடந்த மார்ச் மாதம் புனே மைதானத்தில் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய முதல் ஒருநாள் போட்டியில் சிரேயாஸ் இடதுகை ஷோல்டர் காயமடைந்தது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தாக வேண்டும் என்று மருத்துவ குழு அறிவுறுத்தியது.

மருத்துவ குழுவின் அறிவுறுத்தல்படி ஏப்ரல் 9ஆம் தேதி அவருக்கு நல்லவிதமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. தற்பொழுது அவர் ஓய்வு பெற்று வருகிறார். ஐயர் தற்பொழுது இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட போவதில்லை என்று பிசிசிஐ அறிவித்துள்ளது

Shreyas Iyer to miss IPL 2021, confirms Delhi Capitals Co-owner | Hindustan  Times

மூன்று முதல் ஐந்து மாதங்கள் கண்டிப்பாக அவருக்கு தேவைப்படும்

அறுவை சிகிச்சை முடிந்தவுடன் பொதுவாக 3 முதல் 5 மாதங்கள் ஒரு வீரருக்கு ஓய்வானது தேவைப்படும். அதன்படி பார்க்கையில் சிரேயாஸ் ஐயர் தற்பொழுது வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார். அவர் மறுபடியும் இயல்பு நிலைக்கு திரும்பி வலை பயிற்சியை மேற்கொண்டு, மீண்டும் விளையாடும் தகுதியுடன் திரும்ப வேண்டும். அதற்குப் பின்னர்தான் இந்திய அணியில் அவர் பழையபடி விளையாட முடியும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

ஐயர் நிச்சயமாக இந்திய அணிக்காக உலக கோப்பை டி20 தொடரில் விளையாட போகிறார் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அவர் உலக கோப்பை டி20 தொடரில் விளையாட வேண்டும் என்றால் நிச்சயமாக அவருக்கான ஓய்வு தற்போது தேவைப்படுகிறது. இந்த ஓய்வு காலத்தில் அவர் மீண்டும் பழையபடி திரும்பி வரவேண்டும். எனவேதான் அவரை இலங்கைக்கு எதிரான தொடரில் நடக்கவில்லை என்று பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

Shreyas Iyer to miss IPL 2021 due to shoulder injury. - CricLife

ஷிகர் தவான் அல்லது ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாட போகும் இந்திய அணி

இந்திய சீனியர் வீரர்கள் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும், அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டியிலும் அவர்கள் விளையாட இருக்கின்றனர்.

எனவே முற்றிலும் மாறுபட்ட வேறு ஒரு அணியை பிசிசிஐ தேர்ந்தெடுத்துள்ளது. ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா மற்றும் சஹால் ஆகியோருடன் ஒரு இளம் வீரர்களை கொண்ட அணியை பிசிசிஐ அண்மையில் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த அணையை ஷிகர் தவான் அல்லது ஹர்திக் பாண்டியா தலைமை தாங்க போகிறார்கல்.

Shreyas Iyer

ஷிகர் தவான் உள்ளூர் ஆட்டங்களில் டெல்லி அணியை தலைமை தாங்கியிருக்கிறார். அதேபோல ஹைதராபாத் அணியை ஒருமுறை தலைமை தாங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போதைய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துணை கேப்டன் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மறுமுனையில் ஹர்திக் பாண்டியா இதுவரை எந்தவித போட்டியிலும் அணியை தலைமை தாங்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தவான் தலைமையில் தான் இந்திய அணி விளையாடும் என்று எதிர்பார்க்கலாம்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *