இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்குப் பதிலாக தமிழக வீரர் விஜய சங்கர், சுப்மான் கில் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தி சினிமா இயக்குனர் கரண் ஜோஹர் ‘காபி வித் கரண்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்ட்யாவும் கே.எல்.ராகுலும், பல பெண்களுடன் சுற்றியது பற்றியும், பெண்கள் பற்றி தவறாகவும் பேசியதாகக் கூறப்படுகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் இருவரையும் கண்டித்த இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பியது. அதைத் தொடர்ந்து, நடந்த சம்பவத்துக்கு அவர்கள் வருத்தம் தெரிவித்தனர். அதை ஏற்காத இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய், விசாரணை முடியும் வரை ஹர்திக் பாண்ட்யா, ராகுல் இருவரும் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார்.

இதையடுத்து ஆஸ்திரேலி யாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டனர். அவர்கள் விரைவில் இந்தியா திரும்புகின் றனர்.

இவர்களுக்கு பதில் தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கரும் சுப்மான் கில்லும் அணியில் இணைகின்றனர். சமீபத்தில் நடந்த ரஞ்சி போட்டிகளில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விஜய் சங்கர் ஏற்கனவே, இலங்கையில் நடந்த முத் தரப்பு தொடரில் பங்கேற்றிருந்தார்.

சுப்மான் கில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் சிறப்பாக விளையாடி, கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர். 2018-19 ஆம் ஆண்டு ரஞ்சித் தொடரில் சிறப்பாக ஆடி ரன் குவித்துள்ளார். இதையடுத்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் நேற்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவி யது. அடுத்தப் போட்டி, அடிலெய்டில் வரும் 15 ஆம் தேதி நடக்கிறது.

கடந்த ஆண்டில் நியூசிலாந்தில் நடந்த 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைப் போட்டியில் சுப்மான் கில் தொடர் நாயகன் விருதை வென்றார். இதைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கில்லை ரூ.1.80 கோடிக்கு விலைக்கு வாங்கியது. கொல்கத்தா அணியில் இடம் பெற்ற கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 57 ரன்கள் சேர்த்து வெற்றி பெற வைத்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக வீரர் விஜய் சங்கர் 2-வது முறையாக இந்திய அணியில் வாய்ப்புப் பெற்றுள்ளார். இதற்கு முன் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையில் நடந்த நிடாஹஸ் கோப்பையில் இடம் பெற்றிருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான இந்தியஏ அணியில் இடம் பெற்றிருந்த விஜய் சங்கர் 3 போட்டிகளில் 188 ரன்கள் குவித்தார். மேலும், இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடத்தை நிரப்ப ஆல்ரவுண்டர் தேவை என்பாதல், விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். • SHARE

  விவரம் காண

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம்: ரவி சாஸ்திரி

  இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புகள் அதிகம் என இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘டெய்லி...

  தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் !!

  தோனியை புகழ்ந்து தள்ளிய மைக்கெல் கிளார்க் தனக்கு பாண்டிங் எப்படியோ அப்படித்தான் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு தோனியின் ஆலோசனை தேவை என்று ஆஸ்திரேலிய...

  பந்தை நீங்களே வாங்கிக்கங்க; மைதானத்தில் தோனி கல கல !!

  பந்தை நீங்களே வாங்கிக்கங்க; மைதானத்தில் தோனி கல கல மெல்போர்னில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று இந்திய...

  தோனியை பாராட்டிய பிராக் லெஸ்னரின் மேனேஜர்!!

  Eat..Sleep.. Conquer..Repeat என்னும் பிராக் லெஸ்னரின் கோட்பாடுகளை போலவே தோனி Eat..Sleep.. Finsih Game..Repeat  செய்கிறார் என அவரின் மேனேஜர் ஐசிசி கிரிக்கெட்...

  உலகக்கோப்பையில் இந்திய அனியின் நெ.4ல் தோனி ஆடவேண்டும்: சவுரவ் கங்குலி

  உலகக்கோப்பையில் இந்திய அனியின் நெ.4ல் தோனி ஆடவேண்டும் என சவுரவ் கங்குலி கூறியுள்ளார். 3 மாதங்களுக்குப் பிறகு லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்த தோனி...