ஜூனியர் போட்டிகளில் ஆடிக்கொண்டிருந்த எனக்கு இவ்வளவு விரைவாக சீனியர் போட்டிகளில் ஆடுவதற்கு வாய்ப்புகள் கிடைத்துள்ளது என்றால் அதற்க்கு முக்கிய காரணம் ராகுல் டிராவிட் அவர்கள் தான் என மனம் திறக்கிறார் இளம் ஆட்டக்காரர் சுபமன் கில்.

2018  நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பா ஆடி ஆட்டநாயகன் விருதை தட்டி சென்ற சுபமன் கில், ஐபில் போட்டிகளில் கொல்கத்தா அணிக்கா ஏலம் எடுக்கப்பட்டார். கொல்கத்தா அணிக்காக அரைசதங்களும் விளாசினார். அதன்பிறகு இந்தியா ஏ அணியில் ஆடுவதற்கான வாய்ப்பு அவர் வீடு கதவை தட்டியது. அப்போதிருந்து ஏறுமுகம் தான் கில்க்கு.

அண்டர் 19 உலகக்கோப்பை முடிந்து சரியாக 12 மாதம் கழித்து சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைத்தது போதும் மகிழ்கியின் உச்சிக்கே பறந்தார் கில்.

கடந்த 12 மாதங்களில்..

டிராவிட் சார் இல்லனா நான் இல்லை - மனம் திறக்கும் இளம் இந்திய வீரர் 2

எனது அடிப்படை வாழ்க்கையில் தற்போது நிறைய மாறியிருக்கலாம். ஆனால்,  கடந்த ஆண்டு தொடக்கத்தில் என் மனதில் இருந்தது எல்லாம் ஒன்று மட்டும் தான், நான் (யு -19) உலகக் கோப்பைக்கு தயாராகிக்கொண்டிருந்தபோது, இந்த தொடரில் நான் சிறப்பாக ஆடினால் அது எனது அடுத்தகட்ட வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பது தான். ஆனால் இவை அனைத்தும் இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்று நினைத்தேன்.

ஜூனியர் கிரிக்கெட் முதல் சீனியர் கிரிக்கெட் வரை வெற்றிகரமான மாற்றம்..

டிராவிட் சார் இல்லனா நான் இல்லை - மனம் திறக்கும் இளம் இந்திய வீரர் 3

என் வாழ்க்கையில் இந்த மாற்றத்தில் ராகுல் டிராவிட் சார் நிறைய உதவினார். ஒரு இளம் வயது கிரிக்கெட்டில் இருந்து சீனியர் அளவிற்கு மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். இது பேட்டிங் பற்றி மட்டும் அல்ல. பல முறை, உடற்பயிற்சியில் தவற விடலாம், அல்லது பீல்டிங் உலகத்தரத்திற்கு இருக்க வேண்டும். விளையாட்டு அனைத்து அம்சங்களிலும் மிக உயர்ந்த தரத்திற்கு பொருந்த வேண்டும். எல்லாவற்றையும் உணர எனக்கு உதவியது ராகுல் சார் கோச்சிங். தவிர, நான் அவரிடம் வெற்றி மற்றும் தோல்விகளை கையாள கற்று கொண்டேன். மேலும், ஒரு இளைஞன் மிக உயர்ந்த மட்டத்தை அடைந்தாலும், அதை எளிதாக எடுத்துக்கொள்வதோடு முன்பு இருந்ததை விட மேலும் கடிமாக உழைக்க வேண்டும். மற்ற அம்சங்களில் கூடுதல் முயற்சியை எடுக்க வேண்டியது முக்கியம் என்று நான் உணர்கிறேன் ஆனால் நீங்கள் உயர் மட்டத்தில் நிலைத்திருக்க விரும்பினால் உங்கள் அடிப்படை பணி நெறிமுறைகளில் சமரசம் செய்ய முடியாது.

முதல் ஒருநாள் போட்டியில் ஆடியது… 

டிராவிட் சார் இல்லனா நான் இல்லை - மனம் திறக்கும் இளம் இந்திய வீரர் 4

இது ஒரு பெரும் அனுபவம். மூன்றாவது போட்டியின்போது அடுத்ததாக விளையாடலாம்  ரவி [சாஸ்திரி] என்னிடம் சொன்னபோது, அது ஒரு கனவு உணர்வு. மாஹியிடம் இருந்து இந்தியா தொப்பி பெற்றது வாழ்நாள் கனவான ஒன்று நினைவான மாதிரியாக இருந்தது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *