சேட்டை செய்த சித்தார்த் கவுலை எச்சரித்தது பி.சி.சி.ஐ.!! 1
New Delhi: Siddarth Kaul of Sunrisers Hyderabad celebrates fall of Karun Nair's wicket during an IPL 2017 match between Sunrisers Hyderabad and Delhi Daredevils at Feroz Shah Kotla in New Delhi on May 2, 2017. (Photo: Surjeet Yadav/IANS)
சேட்டை செய்த சித்தார்த் கவுலை எச்சரித்தது பி.சி.சி.ஐ.

மும்பை இந்தியன்ஸ் அணியுடனான போட்டியின் போது போட்டி விதிமுறைகளை மீறிய ஹைதராபாத் வீரர் சித்தார்த் கவுலை பி.சி.சி.ஐ., எச்சரித்துள்ளது.

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் ரசிகர்களின் பெரும் வரவேற்பிற்கு மத்தியில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

சேட்டை செய்த சித்தார்த் கவுலை எச்சரித்தது பி.சி.சி.ஐ.!! 2

இந்த தொடரின் நேற்றைய போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 118 ரன்கள் என்ற எளிய இலக்கை கூட துரத்த முடியாமல் அடுதடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் ஹைதராபாத் ரசிகர்கள் ஒவ்வொரு விக்கெட்டிற்கும் ஆரவாரம் செய்தனர்.

சேட்டை செய்த சித்தார்த் கவுலை எச்சரித்தது பி.சி.சி.ஐ.!! 3
New Delhi: Siddarth Kaul of Sunrisers Hyderabad celebrates fall of Karun Nair’s wicket during an IPL 2017 match between Sunrisers Hyderabad and Delhi Daredevils at Feroz Shah Kotla in New Delhi on May 2, 2017. (Photo: Surjeet Yadav/IANS)

இதில் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் மார்கண்டேவின் விக்கெட்டை கைப்பற்றிய சித்தார்த் கவுல், அவரது முகத்திற்கு நேரே சென்று அவரை வெறுப்பேற்றும் விதமாக கத்தினர். சித்தார்த் கவுலின் இந்த செயல் ஐ.பி.எல் டி.20 தொடரின் விதிமுறைகளைக்கு மீறிய செயலாகும்.

இந்நிலையில், போட்டி விதிமுறைகளை மீறிய சித்தார்த்த் கவுலிற்கு பி.சி.சி.ஐ., இன்று கண்டனம் தெரிவித்துள்ளது. சித்தார்த் கவுலின் இந்த நடவடிக்கை அடுத்த போட்டிகளிலும் தொடரும் பட்சத்தில் அவர் மீது பி.சி.சி.ஐ நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளது.

ஹைதராபாத்திடம் வீழ்ந்த மும்பை;

ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசன் இந்தியாவின் பல பகுதிகளில் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நடைபெற்று வரும் இந்த தொடரின் நேற்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

சேட்டை செய்த சித்தார்த் கவுலை எச்சரித்தது பி.சி.சி.ஐ.!! 4

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர்கள் மும்பை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வந்த வேகத்தில் வெளியேறினர்.

ஹைதரபாத் அணியில் கேன் வில்லியம்சன்(29), யூசுப் பதான்(29), மணிஷ் பாண்டே(16) மற்றும் முகமது நபி(14) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் வெறும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 18.4 ஓவரில் வெறும் 118 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

சேட்டை செய்த சித்தார்த் கவுலை எச்சரித்தது பி.சி.சி.ஐ.!! 5

இதனையடுத்து வெறும் 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் முதல் ஓவரில் இருந்தே ஹைதராபாத்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள கடுமையாக திணறினர்.

சூர்யகுமார் யாதவ்(34), ஹர்திக் பாண்டியா(24) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் 10 ரன்களை கூட தாண்டமால் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்து அடுத்தடுத்து வெளியேறியதால் 18.5 ஓவரில் வெறும் 87 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *