சிராஜை “Brown dog” எனவும் பும்ராவை “Big mokey” என்றும் அழைத்து சர்ச்சை ! பிசிசிஐ கடும் எதிர்ப்பு ! 

சிட்னி மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய 338 ரன்கள் குவித்தனர். இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 97 ரன்கள் முன்னிலை வகித்து, தனது 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 407 என்ற மிகப்பெரிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. மிகப்பெரிய இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 334 ரன்களை குவித்து கடைசி வரை நின்று போட்டியை ட்ரா செய்தது.

சிராஜை “Brown dog” எனவும் பும்ராவை “Big mokey” என்றும் அழைத்து சர்ச்சை ! பிசிசிஐ கடும் எதிர்ப்பு ! 2

இந்நிலையில், 3வது மற்றும் 4வது நாளன்று பீல்டிங் செய்துக்கொண்டிருந்த  இந்திய வீரர்களான பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரை ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் இனவெறி குறித்து தகாத வார்த்தைகளை பயன்படுத்தி சீண்டியுள்ளனர்.  சிராஜை “ப்ராவுன் டாக்” (Brown dog) எனவும் பும்ராவை “பிக் மங்க்கி” (Big Monkey) எனவும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் அழைத்துள்ளதாக தற்போது வெளியடப்பட்டுள்ளது.

சிராஜை “Brown dog” எனவும் பும்ராவை “Big mokey” என்றும் அழைத்து சர்ச்சை ! பிசிசிஐ கடும் எதிர்ப்பு ! 3

இதனால் கோபமடைந்த இந்த இரு இந்திய வீரர்களும் தங்களது அணி கேப்டன் ரஹானேவிடம் தெறிவித்தனர். இதன்பிறகு ரஹானே, பும்ரா, சிராஜ் என இந்திய வீரர்கள் அனைவரும் நடுவர்களிடம் புகார் செய்தனர். இந்திய வீரர்களை சீண்டிய ஆஸ்திரேலியா ரசிகர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இவர்களை உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற்ற செய்தார்கள் சிட்னி மைதான நிறுவாகிகள். அந்த ஆஸ்திரேலியா வீரர்களை சிட்னி போலீசார் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களின் இந்த மோசமான செயல் பல்வேறு சர்ச்சையை கிளப்பியது. ஆஸ்திரேலிய மற்றும் இந்திய முன்னாள் வீரர்கள் பலர் தங்களது விமர்சனத்தை பதிவு செய்து வருகின்றனர். 

சிராஜை “Brown dog” எனவும் பும்ராவை “Big mokey” என்றும் அழைத்து சர்ச்சை ! பிசிசிஐ கடும் எதிர்ப்பு ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *