ஐ.பி.எல். கோப்பையை மும்பை அணி வென்றாலும், ட்விட்டரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்தே அதிகம் பகிரப்பட்டுள்ளது. வீரர்களைப் பொருத்தவரையில், சென்னை கேப்டன் “தல” தோனி, அதிகம் ட்விட் செய்யப்பட்டவராக முதலிடம் பிடித்துள்ளார்.

கடந்த மார்ச் 23 ஆம் தேதி தொடங்கிய 12-வது ஐ.பி.எல். தொடர், மே 12 ஆம் தேதி நிறைவடைந்தது. மிகவும் விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-வது முறையாக கோப்பையை‌ கைப்பற்றியது. நடப்பு ஐ.பி.எல். தொடரின்போது, சமூகவலைதளமான ட்விட்டரில், ரசிகர்கள், வீரர்கள், அணி உரிமையாளர்கள் தெரிவித்த கருத்துகள் குறித்த விவரங்களின் தொகுப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி மார்ச் ஒன்றாம் தேதி முதல் மே 13 ஆம் தேதி வரையிலான காலத்தில், ஐ.பி.எல். குறித்து 2 கோடியே 70 லட்சம் ட்விட்கள் பதிவிடப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, 44 சதவீதம் அதிகமாகும். வீரர்களைப் பொருத்தவரையில், சென்னை கேப்டன் தல தோனி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலியும், 3-வது இடத்தில் மும்பை கேப்டன் ரோஹித் சர்மாவும் உள்ளனர்.

தோனி குறித்த ஹர்திக் பாண்டியாவின் ட்விட், தொடரின் சிறந்த ட்விட்டாக சிறப்பிடம் பெற்றுள்ளது. சென்னையில் மே 7 ஆம் தேதி நடைபெற்ற முதலாவது தகுதிச்சுற்று போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, ஹர்திக் பாண்டி‌யா தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டதோடு, ”எனது முன்மாதிரி, எனது நண்பர், எனது சகோதரர், எனது ஜாம்பாவான்” என தோனியை குறிப்பிட்டிருந்தார். பாண்டியாவின் இந்த ட்வீட் 16 ஆயிரம் பேரால் ரீ ட்விட் செய்யப்பட்டுள்ளது.

ரசிகர்களிடையே அதிகம் விவாதிக்கப்பட்ட போட்டியாக, சென்னை மும்பை இடையேயான இறுதிப்போட்டி முதலிடம் பிடித்துள்ளது. இதில் மும்பைக்கு ஆதரவாக 63 சதவிகிதம் பேரும், சென்னைக்கு ஆதரவாக 37 சதவிகிதம் பேரும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். இறுதிப்போட்டியில், மும்பை அணி கோப்பையை வென்றாலும், ட்விட்டரில் கோலோச்சியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். இதில் மும்பைக்கு இரண்டாமிடமும், கொல்கத்தா அணிக்கு மூன்றாவது இடமும் கிடைத்துள்ளன.

இந்நிலையில், எந்த சூழ்நிலையிலும் தங்கள் மீது நம்பிக்கை வைத்து, வெற்றி – தோல்வி என அனைத்து தருணங்களிலும் உடனிருந்த ரசிகர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மனப்பூர்வமான நன்றி தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், எது நடந்தாலும் சிங்கத்தின் வேட்டை தொடரும் என்றும் அறிவித்துள்ளது. • SHARE

  விவரம் காண

  விராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி !!

  விராட் கோஹ்லி இந்த விசயத்தை சரி செய்து கொள்ள வேண்டும்; அட்வைஸ் கொடுக்கும் கங்குலி ஒவ்வொரு போட்டிக்கும் தேவையான ஆடும் லெவனை தேர்வு செய்வதில்...

  இந்திய அணி அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது; சீன் போடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் !!

  முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி 2ம் நாள் முடிவில் 189 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இஷாந்த் சர்மா...

  ஆர்ச்சரிடன் அடவாடிக்கு ஆப்படித்த ஆஸ்திரேலியா!! இங்கிலாந்துதிற்கு எட்ட முடியாத இலக்கு நிர்ணயம்!

  லீட்ஸ் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் 2வது இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து இங்கிலாந்து...

  இஷாந்த் சர்மா 5 விக்கெட் எடுக்க பும்ரா கொடுத்த மிக வித்யாசமான ஐடியா!! இஷாந்த் சர்மா வெளியிட்ட தகவல்

  2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் மே.இ.தீவுகளும், இந்தியாவும் ஆடுகின்றன. இதன் முதல் ஆட்டம் ஆண்டிகுவாவில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற மே.இ. தீவுகள்...

  அடுத்த டி20 தொடருக்கான அணி அறிவிப்பு!! ஓய்வை அறிவிக்கப்போகும் சீனியர் வீரருக்கு அணியில் இடம்!!

  நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை-நியூசிலாந்து அணிகள்...