Cricket, Ashes, Steve Smith, Australia, Mitchell Marsh

ஸ்மித் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 549 ரன்கள் குவித்துள்ளது.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 403 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய 2–வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் 92 ரன்னுடனும், ஷேன் மார்ஷ் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

ஸ்மித்- 229 , மிட்செல் மார்ஷ் - 181: பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா 554 ரன்கள் குவிப்பு 1
PERTH, AUSTRALIA – DECEMBER 16: Steve Smith of Australia celebrates after reaching his century during day three of the Third Test match during the 2017/18 Ashes Series between Australia and England at WACA on December 16, 2017 in Perth, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஸ்மித் சதம் அடித்தார். அவர் 138 பந்தில் 16 பவுண்டரி, 1 சிக்சருடன் சதத்தை பதிவு செய்தார். இது அவருக்கு டெஸ்டில் 22-வது சதமாகும். மறுமுனையில் விளையாடிய ஷேன் மார்ஷ் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்திருந்தது.

5-வது விக்கெட்டுக்கு ஸ்டீவன் ஸ்மித் உடன் மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்தின் 7 பந்து வீச்சாளர்கள் பந்து வீசி பார்த்தார்கள். எந்த பலனும் இல்லை. இருவரும் ரன்கள் குவித்துக் கொண்டிருந்தனர். இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 300, 400 என ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

ஸ்மித்- 229 , மிட்செல் மார்ஷ் - 181: பெர்த் டெஸ்டில் ஆஸ்திரேலியா 554 ரன்கள் குவிப்பு 2
PERTH, AUSTRALIA – DECEMBER 16: Steve Smith of Australia celebrates with Shaun Marsh of Australia after reaching his century during day three of the Third Test match during the 2017/18 Ashes Series between Australia and England at WACA on December 16, 2017 in Perth, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

மிட்செல் மார்ஷ் தனது சொந்த மைதானத்தில் முதல் சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் ஸ்மித் இரட்டை சதம் அடித்தார். ஸ்மித்தின் இரட்டை சதத்தாலும், மிட்செல் மார்ஷின் சதத்தாலும் 3-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 549 ரன்கள் குவித்துள்ளது. ஸ்மித் 229 ரன்னுடனும், மிட்செல் மார்ஷ் 181 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

Cricket, Ashes, Steve Smith, Australia, Mitchell Marsh
PERTH, AUSTRALIA – DECEMBER 16: Mitch Marsh of Australia bats during day three of the Third Test match during the 2017/18 Ashes Series between Australia and England at WACA on December 16, 2017 in Perth, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

தற்போது வரை ஆஸ்திரேலியா 145 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. நாளைய 4-வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அதிவேகமாக விளையாடி 350 ரன்களுக்கு மேல் முன்னிலை வகித்தால் இன்னிங்சை வெற்றி பெற வாய்ப்புள்ளது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *