உனக்கு இனி கேப்டன் பதவி இல்லை..! சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு ! 1

உனக்கு இனி கேப்டன் பதவி இல்லை..! சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு ! 

கடந்த 13வது ஐபிஎல் தொடரா கொரோனா வைரஸ் காரணமாக செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் கோப்பையை கைப்பற்றியது. தற்போது 2021ல் நடைபெறும் 14 வது ஐபிஎல் சீசன் மே மாதம் இந்தியாவிலயே நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த  ஐபிஎல் சீசனில் 8 அணிகள் மட்டுமே விளையாடும்.

உனக்கு இனி கேப்டன் பதவி இல்லை..! சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு ! 2

10 அணிகள் கொண்ட ஐபிஎல் தொடர் 2022ல் தான் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி இந்த ஐபிஎல் தொடரை மிகப்பெரிய அளவில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் சீசனுக்கான அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் ஏலம் பிப்ரவரி மாதம் 11ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனால் அனைத்து அணிகளும் தங்களது அணியிலிருந்து தக்கவைத்துக் கொள்ளும் மற்றும் நீக்கப்படும் வீரர்களின் முடிவை வரும் 20ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும். இதனால் அனைத்து அணிகளும் தங்களது அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருக்கும் வீரர்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணி ஐபிஎல் கோப்பையை ஷேன் வார்ன் தலைமையில் வென்றது.

உனக்கு இனி கேப்டன் பதவி இல்லை..! சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு ! 3

இதன் பிறகு கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் ராஜஸ்தான் அணியை 3 முறை மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வைத்துள்ளார். 2018 ஆம் ஆண்டு ஸ்டீவ் ஸ்மித்தை 12.5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி தக்க வைத்துக் கொண்டது. ஆனால் தற்போது ராஜஸ்தான் அணி ஸ்மித்தை வெளியேற்றுவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் ராஜஸ்தான் அணியின் புதிய கேப்டனாக சஞ்சு சாம்சன் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உனக்கு இனி கேப்டன் பதவி இல்லை..! சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *