வீடியோ : “எது பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்” கேமரா இருப்பது தெரியாமல் தவறு செய்து மாட்டிக்கொண்ட ஸ்மித் ! 1

“எது பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்” கேமரா இருப்பது தெரியாமல் தவறு செய்து மாட்டிக்கொண்ட ஸ்மித் ! 

இந்தியா மற்றும் ஆஸ்திரெலியா இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது சிறப்பாக நடைபெறு வருகிறது. 3வது டெஸ்ட் போட்டி ஜனவரி 7ஆம் தேதி முதல் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய 338 ரன்கள் குவித்தனர். இதையடுத்து இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸ் 10 விக்கெட்டுகளையும் இழந்து 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் இளம் வீரர்கள் சுப்மன் கில் மற்றும் புஜாரா அரை சதம் விளாசினர்.

வீடியோ : “எது பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்” கேமரா இருப்பது தெரியாமல் தவறு செய்து மாட்டிக்கொண்ட ஸ்மித் ! 2

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 97 ரன்கள் முன்னிலை வகித்து, தனது 2வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 312 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 407 என்ற மிகப்பெரிய இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது. மிகப்பெரிய இலக்கை எதிகொண்டு களம் இறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 334 ரன்களை குவித்து கடைசி வரை நின்று போட்டியை ட்ரா செய்தது.  

இந்நிலையில், இன்று நடைபெற்ற ஐந்தாவது நாள் போட்டியை புஜாரா மற்றும் ரகானே தொடங்கினர். ரகானே 4 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இதன்பிறகு புஜாரா மற்றும் ரிஷப் பந்த் நிதானமாக விளையாட தொடங்கினர். ரிஷப் பண்ட் கடந்த போட்டிகளை விட இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்தார். தேநீர் இடைவேளையின் போது இந்திய அணிக்கு 127 ரன்கள் தேவைப்பட்டது.

வீடியோ : “எது பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்” கேமரா இருப்பது தெரியாமல் தவறு செய்து மாட்டிக்கொண்ட ஸ்மித் ! 3

இடைவேளை முடிந்து வீரர்கள் காலத்திற்குள் களமிறங்கினர். அப்போது ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்  ரிஷப் பண்ட் போட்டு வைத்திருந்த கார்டை நீக்கினார். சிறப்பாக விளையாடி வரும் ரிஷப் பண்ட்டை குழப்புவதற்காக இந்த கேவலமான செயலை ஸ்மித் செய்துள்ளார். ஆனால் ரிஷப் பண்ட் தனது கார்டை மீண்டும் போட்டு கொண்டார். ஸ்மித் செய்த இந்த செயல் ஸ்டெம்புகளில் இருந்த கேமராக்கள் மூலம் பதிவாகியது.

ரிஷப் பண்டின் கார்டை மாற்றியமைத்த ஸ்மித்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்காக பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் 97 ரன்களை பெற்று சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *