உலகக்கோப்பையில் இந்திய அனியின் நெ.4ல் தோனி ஆடவேண்டும்: சவுரவ் கங்குலி 1

உலகக்கோப்பையில் இந்திய அனியின் நெ.4ல் தோனி ஆடவேண்டும் என சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

3 மாதங்களுக்குப் பிறகு லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்த தோனி 3 அரைசதங்களை அடித்து ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதைப் பெற்றார். இரு அரைசதங்கள் இந்திய அணிக்கு வெற்றிகர பினிஷிங் ஆனது.

இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்து வரும் தோனி, மேட்ச் முடிந்தவுடன் பரிசளிப்பு நிகழ்ச்சியில் தொடர் நாயகன் விருதைப் பெற்று பேசியதாவது:உலகக்கோப்பையில் இந்திய அனியின் நெ.4ல் தோனி ஆடவேண்டும்: சவுரவ் கங்குலி 2

4ம் நிலையில் இறங்குவதை எஞ்ஜாய் செய்கிறீர்களா என்று கேட்க, “ஆம் அது நன்றாக உள்ளது. நான் 6-ம் நிலையில் இறங்கினால், வேறொருவர் 4ம் நிலையில் இறங்கும்போது இருவரது நிலையையும் பரஸ்பரம் மாற்றமுடியுமா என்று பார்க்க வேண்டும், ஆனால் அதே வேளையில் அணியின் பேலன்சும் தவறக் கூடாது. நாம் எங்கு ஆட விரும்புகிறோம் என்பது முக்கியமல்ல, எத்தனை வீரர்களை அந்த இடத்தில் நிரப்ப முடியும் என்பதே விஷயம்.

நான் எந்த நிலையிலும் இறங்கத் தயார். மீண்டும் 5 அல்லது 6ம் நிலையில் இறங்கச் சொன்னாலும் எனக்கு மகிழ்ச்சியே.  முக்கியமான விஷயமென்னவெனில் அணிக்கு நான் எந்த நிலையில் தேவைப்படுகிறேன் என்பதுதான். 14 ஆண்டுகள் ஆடிவிட்டு நான் 6ம் நிலையில் இறங்க மாட்டேன் என்றோ 4 அல்லது 5-ல் தான் என் தேவை இருக்கிறது என்று கூற முடியாது. அணிக்கு நான் எந்த நிலையில் தேவைப்படுகிறேனோ அந்த நிலையில் இறங்க விரும்புகிறேன், அதில் மகிழ்ச்சியடைகிறேன்.உலகக்கோப்பையில் இந்திய அனியின் நெ.4ல் தோனி ஆடவேண்டும்: சவுரவ் கங்குலி 3

இது மிகவும் மந்தமான பிட்ச் ஆகவே விரும்பும்போதெல்லாம் அடிப்பது கடினம். முடிவு வரை எடுத்துச் செல்ல வேண்டும், ஏனெனில் அவர்கள் பவுலர்கள் சிலருக்கு ஓவர்கள் முடிவடையும் தருணம், ஆகவே இந்தப் பிட்சில் எந்த பவுலரை நாம் அடிக்க வேண்டுமென்பதை தீர்மானித்து ஆட வேண்டும். நன்றாக வீசுபவர்களை அடிக்கப் போய் ஆட்டமிழப்பதில் ஒரு பயனும் இல்லை.

அதுதான் ஆட்டத்தின் திட்டம் கேதார் ஜாதவ் ஒத்துழைத்தார். கேதார் ஜாதவ் சில புதுவகை ஷாட்களை ஆடக்கூடிய திறமை படைத்தவர் கிரேட் ஷாட்களையும் அடிக்கக் கூடியவர். கடைசி ஓவர் வரை ஆட வேண்டும் என்ற நிலையில் கேதார் ஜாதவ் இன்னிங்ஸ் என் அழுத்தத்தை குறைத்தது.

இவ்வாறு கூறினார் தோனி.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *