Cricket, India, Hardik Pandya, Sourav Ganguly

தோனி போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானவர்கள் தோனியின் இடத்தை மற்ற வீரர்கள் நிரப்புவது மிகவும் கடினமான ஒன்று.

தோனி இதுவரை 299 ஒரு நாள் போட்டியில் விளையாடி உள்ளார் இவர் இந்திய அணியின் கடினமான நேரங்களில் பொறுமையாகவும் நிதானமாகவும் விளையாடி அணியின் வெற்றிக்கு உதவி செய்வார்.

தோனி தற்போது இந்திய அணியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து உள்ளார் அதுவும் இல்லாமல் இவரின் விளையாட்டு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது.

இந்த இலங்கை தொடரிலும் தோனி கடந்த இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற செய்து உள்ளார்.

எனவே தோனியின் பங்கு இந்திய அணிக்கு மிகவும் கூறியுள்ளார் கங்குலி.

இலங்கைக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.

இதன்மூலம் 3-ஆவது வெற்றியைப் பெற்றிருக்கும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இலங்கையின் பல்லகெலேவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் லஹிரு திரிமானி அதிகபட்சமாக 105 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்தார். சன்டிமல் 36, சிறிவர்த்தனா 29, கேப்டன் கபுகேதரா 14, டிக்வெல்லா 13, மேத்யூஸ் 11 ரன்கள் எடுக்க, எஞ்சிய வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இந்தியத் தரப்பில் பூம்ரா 5 விக்கெட்டுளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா அசத்தலாக ஆட, மறுமுனையில் ஷிகர் தவன் 5, கேப்டன் விராட் கோலி 3, கே.எல்.ராகுல் 17 ரன்களில் ஆட்டமிழக்க, கேதார் ஜாதவ் டக் அவுட் ஆனார். பின்னர் வந்த தோனி நிதானமாக ஆட, மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா 118 பந்துகளில் சதமடித்தார்.

இந்தியா 210 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆத்திரமடைந்த இலங்கை ரசிகர்கள், மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டு, பிறகு மீண்டும் நடைபெற்றது. இறுதியில் இந்திய அணி 45.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

தொடக்க வீரர் ரோஹித் சர்மா 145 பந்துகளில் 2 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 124, தோனி 86 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை தரப்பில் தனஞ்ஜெயா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜஸ்பிரித் பூம்ரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகள் இடையிலான 4-ஆவது ஆட்டம் வரும் வியாழக்கிழமை கொழும்பில் நடைபெறுகிறது. • SHARE
  Cricket Lover | Movie Lover | love to write articles

  விவரம் காண

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் !!

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் மூன்று வகை பாகிஸ்தான் அணிக்கும் சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்து வருகிறார்....

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் இந்திய டி.20 அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தான் பெரிதாக கவலை...

  இந்திய அணியின் உடையில் ராகுல் டிராவிட்: உண்மையான காரணம் இதுதான்!

  இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறும் இடத்துக்கு இன்று சென்ற தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன்...

  தோனிக்கெல்லாம் காலம் முடிஞ்சு போச்சு, கெளம்ப சொல்லுங்க! பெரிய இடத்தில் கை வைத்த சுனில் கவாஸ்கர்

  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காலம் முடிந்துவிட்டது. அவருக்கு அடுத்து இருக்கும் ரிஷப் பந்தை நாம் வளர்க்க வேண்டும்...

  ரிஷப் பன்ட்டை தூக்கிவிட்டு இவரை களமிறக்குங்கள்; கவாஸ்கர் காட்டம்

  ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய...