7 மாதத்தில் 7 கேப்டன்களை மாற்றியது ஏன்...? புதிய விளக்கம் கொடுத்த பிசிசிஐ தலைவர் கங்குலி !! 1

இந்திய அணி தொடர்ச்சியாக கேப்டன்களை மாற்றி வருவது குறித்தான தனது கருத்தை பிசிசிஐ., தலைவரான சவுரவ் கங்குலி ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோஹித் சர்மா, இந்திய அணியை தொடர்ந்து மிக சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.

7 மாதத்தில் 7 கேப்டன்களை மாற்றியது ஏன்...? புதிய விளக்கம் கொடுத்த பிசிசிஐ தலைவர் கங்குலி !! 2

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியான வெற்றிகளை சந்தித்து வருகிறது. என்னதான் ரோஹித் சர்மா இந்திய அணியின் முழு நேர கேப்டனாக இருந்தாலும், கடந்த 7 மாதங்களுக்குள் இந்திய அணி 7 கேப்டன்கள் தலைமையின் கீழ் விளையாடிவிட்டது. ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டாலோ ரிஷப் பண்ட், ஷிகர் தவான், ஹர்திக் பாண்டியா, கே.எல் ராகுல், பும்ராஹ் என பல வீரர்களுக்கும் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டு வருகிறது. ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் போன்றோரின் தலைமையின் கீழும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், அடிக்கடி கேப்டனை மாற்றி கொண்டே இருப்பது சரியானதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியின் இந்த முடிவை விமர்சித்து வருகின்றனர்.

7 மாதத்தில் 7 கேப்டன்களை மாற்றியது ஏன்...? புதிய விளக்கம் கொடுத்த பிசிசிஐ தலைவர் கங்குலி !! 3

இந்தநிலையில், இந்திய அணி தொடர்ச்சியாக கேப்டன்களை மாற்றி வருவது ஏன் என்பதற்கு பிசிசிஐ., தலைவரான சவுரவ் கங்குலியே விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து சவுரவ் கங்குலி பேசுகையில், “ரோஹித் சர்மா தான் அனைத்து ஃபார்மட்டுக்கான இந்திய அணியின் கேப்டன். ஆனால் வீரர்கள் காயங்கள் அடையாமல் அவர்களது ஃபிட்னெஸை பராமரிக்கும் வகையில் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்படுகிறது. அதனால் சுழற்சி முறையில் நிறைய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. இளம் வீரர்களை வைத்துக்கொண்டுதான் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்தில் இந்திய அணி தொடரை வென்றது. இந்திய அணியில் எப்போது வேண்டுமானாலும் களமிறங்க தகுதியான 30 வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

7 மாதத்தில் 7 கேப்டன்களை மாற்றியது ஏன்...? புதிய விளக்கம் கொடுத்த பிசிசிஐ தலைவர் கங்குலி !! 4

நடப்பு கிரிக்கெட் ஆண்டில் இதுவரை இந்திய அணியை வழிநடத்தியுள்ள கேப்டன்கள்;

1.விராட் கோலி – தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்
2. கேஎல் ராகுல் – தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்
3. ரோஹித் சர்மா (இப்போதைய இந்திய அணியின் நிரந்தர கேப்டன்)
4. ரிஷப் பண்ட் – தென்னாப்பிரிக்க டி20 தொடர்
5. ஹர்திக் பாண்டியா – அயர்லாந்து டி20 தொடர்
6. ஜஸ்ப்ரித் பும்ரா – இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்
7. ஷிகர் தவான் – வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடர்

 

Leave a comment

Your email address will not be published.