இனி பாருங்க எங்க ஆட்டத்த… ஹென்ரிச் க்ளேசன் நம்பிக்கை

இந்திய அணியுடனான நான்காவது போட்டியில் பெற்ற வெற்றி, புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளதாக தென் ஆப்ரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் ஹென்ரிச் க்ளேசன் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் மூன்று போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு 289 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இதனையடுத்து தென் ஆப்ரிக்கா அணியின் பேட்டிங்கின் போது மழை குறுக்கிட்டதால் போட்டியின் ஓவர்கள் 28ஆக குறைக்கப்பட்டு வெற்றி இலக்கும், 202 ஆக குறைக்கப்பட்டது.

மழை நின்றதும் போட்டி துவங்கிய பின், ஆம்லா (33), டிவில்லியர்ஸ் (26), மில்லர் (39) ஆகிய நட்சத்திர வீரர்கள் தங்கள் பங்கை  சரியாக செய்தாலும் அணிக்கு இறுதி வரை இருந்து வெற்றியை பெற்றுத்தரமால் விக்கெட்டை  இழந்து வெளியேறினர்.

டிவில்லியர்ஸ் அவுட்டாகியதும் இந்திய அணி தான் வெற்றி பெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர், ஆனால் அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ஹென்ரிச் க்ளேசன் யாரும் எதிர்பாராத விதமாக தென் ஆப்ரிக்கா அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்து, இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

முக்கியமான நேரத்தில் 27 பந்துகளில் 43 ரன்கள் குவித்த இவரே ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்டநாயகன் விருது பெற்றப்பின் பேசிய ஹென்ரிச், இந்த வெற்றி தங்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது  குறித்து பேசிய அவர், இந்திய அணியுடனான இந்த போட்டியில் வெற்றி பெறுவோம் என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் இந்த வெற்றியின் மூலம் எங்களுக்குள் புதிய உத்வேகம் பிறந்துள்ளது, இது அடுத்தடுத்த போட்டிகளில் நிச்சயம் வெளிப்படும், அடுத்து வரும் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா அணியின் விக்கெட் கீப்பரான டி.காக் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதால், அவருக்கு பதிலாக மூன்றாவது போட்டியில் தான் ஹென்ரிச், தென் ஆப்ரிக்கா அணிக்காக தனது பயணத்தை துவங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த தோல்வி குறித்து இந்திய கேப்டன் கோஹ்லி பேசியதை அறிய இங்கே க்ளிக் செய்யவும்.. 

 • SHARE

  விவரம் காண

  முதலிடத்திற்கு முன்னேறினார் முன்ரோ… விராட் கோஹ்லி பின்னடைவு !!

  முதலிடத்திற்கு முன்னேறினார் முன்ரோ… விராட் கோஹ்லி பின்னடைவு சர்வதேச டி.20 பேட்ஸ்மேன்களுக்கான ஐ.சி.சி., தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணியின் முன்ரோ முதலிடத்திற்கும், ஆஸ்திரேலிய அணியின்...

  ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் !!

  ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு சச்சின், டிராவிட், சேவாக், அஸ்வின், கைஃப் போன்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள்...

  ரோஹித் சர்மா கேப்டன்… முத்தரப்பு தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு !!

  ரோஹித் சர்மா கேப்டன்… முத்தரப்பு தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு முத்தரப்பு தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ., இன்று அறிவித்துள்ளது. இலங்கையின்...

  வீடியோ;  தென் ஆப்ரிக்காவிற்கு மேஜிக் காட்டிய தல தோனி !!

  வீடியோ;  தென் ஆப்ரிக்காவிற்கு மேஜிக் காட்டிய தல தோனி தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடனான மூன்று டி.20...

  தென் ஆப்ரிக்காவை காலி செய்த இந்தியா… ட்விட்டரில் தெறிக்கவிடும் ரசிகர்கள் !!

  தென் ஆப்ரிக்காவை காலி செய்த இந்தியா… ட்விட்டரில் தெறிக்கவிடும் ரசிகர்கள் தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டி.20 தொடரை இந்திய அணி கைப்பற்றியதை சமூக...