தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதித்து ஐ.சி.சி

இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் மெதுவாக பந்துவீசியதன் காரணமாக தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் மூன்று போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி ஜோஹன்ஸ்பெர்க்கில் நேற்று நடைபெற்றது.

இதில் 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்ரிக்கா அணி துரத்தி கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டதால் போட்டியின் ஓவர்கள் 28ஆக குறைக்கப்பட்டு வெற்றி இலக்கும் 202ஆக குறைக்கப்பட்டது.

இதனை சரியாக பயன்படுத்தி கொண்ட தென் ஆப்ரிக்கா அணி வீரர்கள் சிக்ஸர் மழை பொழிந்ததன் மூலம் தென் ஆப்ரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டியில் ஐந்து வேகப்பந்து வீச்சாளருடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீச முடியவில்லை. ஒரு ஓவர் குறைவாக வீசியதால் போட்டி நடுவர், தென்ஆப்பிரிக்கா கேப்டன் மார்கிராமிற்கு போட்டி சம்பளத்தில் இருந்து 20 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு தலா 10 சதவீதமும் அபராதமாக விதித்துள்ளார்.

இன்னும் 12 மாதத்திற்குள் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றால், மார்கிராம் கேப்டனாக செயல்பட்டால் தடைக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படும்.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 5-வது போட்டி நாளைமறுநாள் (13-ந்தேதி) போர்ட் எலிசபெத்தில் நடக்கிறது. • SHARE

  விவரம் காண

  ஹர்திக் பாண்டியா அவ்வளவு வொர்த் இல்ல; முன்னாள் வீரர் காட்டம் !!

  ஹர்திக் பாண்டியா அவ்வளவு வொர்த் இல்ல; முன்னாள் வீரர் காட்டம் இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் கபில்தேவ். அவர்...

  பும்ராஹ்வின் ரீ எண்ட்ரீ கூடுதல் பலத்தை கொடுக்கும்; விராட் கோஹ்லி நம்பிக்கை !!

  பும்ராஹ்வின் ரீ எண்ட்ரீ கூடுதல் பலத்தை கொடுக்கும்; விராட் கோஹ்லி நம்பிக்கை இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ராஹ் காயத்தில் இருந்து விரைவில்...

  ஆசிய கோப்பைக்கு பிறகு ஓய்வுபெற வாய்ப்புள்ள ஐந்து கிரிக்கெட் வீரர்கள் !!

  ஆசிய கோப்பைக்கு பிறகு ஓய்வுபெற வாய்ப்புள்ள ஐந்து கிரிக்கெட் வீரர்கள் இளம் வீரர்கள் பலரின் வருகையில் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஒவ்வொரு...

  காயத்துடன் காத்திருக்கும் விராட் கோஹ்லி அபாயகரமானவர்; எச்சரிக்கும் இங்கிலாந்து பயிற்சியாளர் !!

  காயத்துடன் காத்திருக்கும் விராட் கோஹ்லி அபாயகரமானவர்; எச்சரிக்கும் இங்கிலாந்து பயிற்சியாளர் !! 50 சதவிகிதம் காயத்துடன் இருக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி...

  தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட்டர் யார் என்பதை வெளியிட்ட பும்ரா!!

  இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தற்போது தனக்கு எப்போதும் பிடித்த கிரிக்கெட் வீரர் யார் என்பதை தெரிவித்துள்ளார். இளம் வேகப்பந்து வீச்சாளர் , ஜஸ்ப்ரிட்...