பெங்களூர் அணிக்கு மிகப்பெரும் அடி; கண்ணீர் விடும் ரசிகர்கள்

செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஐ.பி.எல் தொடரின் முதல் சில போட்டிகளில் தென் ஆப்ரிக்கா வீரர்கள் விளையாட வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடர் மார்ச் ஏப்ரல் மே மாதங்களில் நடக்க இருந்த ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 கிரிக்கெட் உலக கோப்பை தொடர் தள்ளி வைக்கப்பட்டதால் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் எட்டாம் தேதி வரை ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரக நாட்டில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

பெங்களூர் அணிக்கு மிகப்பெரும் அடி; கண்ணீர் விடும் ரசிகர்கள் !! 2

அணி நிர்வாகம், ஒளிபரப்பு நிறுவனம், பங்குதாரர்கள் போன்ற பலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அக்டோபர் 26 ஆம் தேதியில் துவங்கியது ஐபிஎல் தொடரை செப்டம்பர் 19ம் தேதியில் இருந்து நவம்பர் எட்டாம் தேதி வரை நடத்த பிசிசிஐ திட்டம் உள்ளது.

கொரோனா காரணமாக எந்த எந்த நாட்டு வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவார்கள் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருந்து வரும் நிலையில், தென் ஆப்ரிக்கா வீரர்கள் இந்த தொடரின் முதல் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவின் தாக்கம் காரணமாக தென் ஆப்ரிக்காவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நாட்டின் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் தென் ஆப்ரிக்கா வீரர்கள் ஐ.பி.எல் தொடரின் பாதியில் தான் தங்களது அணியில் இணைவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூர் அணிக்கு மிகப்பெரும் அடி; கண்ணீர் விடும் ரசிகர்கள் !! 3

இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும், ரசிகர்கள் இந்த தகவல் குறித்து தங்களது கவலைகளை இப்பொழுதே வெளிப்படுத்த துவங்கிவிட்டனர். அதிலும் ஏ.பி டிவில்லியர்ஸ், ஸ்டைன் போன்ற ஜாம்பவான்களை கொண்ட பெங்களூர் அணியின் ரசிகர்கள் தங்களது கவலைகளை சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். தென் ஆப்ரிக்கா வீரர்கள் பங்கேற்கவில்லை என்றால் அது மற்ற அணிகளை காட்டிலும் பெங்களூர் அணிக்கே மிகப்பெரும் பின்னடைவாக பார்க்கப்படும்.

ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க உள்ள தென் ஆப்ரிக்கா வீரர்கள் மற்றும் அவர்கள் விளையாடும் அணிகள் பின்வருமாறு;

டிவில்லியர்ஸ் (பெங்களூர்), டிகாக் (மும்பை), டேல் ஸ்டைன் (பெங்களூர்), கிரிஸ் மோரிஸ் (பெங்களூர்), ரபாடா (டெல்லி), லுங்கி நிகிடி (சென்னை), டூபிளசிஸ் (சென்னை), இம்ரான் தாஹிர் (சென்னை), டேவிட் மில்லர் (ராஜஸ்தான்), ஹர்தஸ் வில்ஜோன் (பஞ்சாப்).

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *