இந்தியாவிற்காக பல உலக கோப்பைகளையும் ஐசிசி தொடரையும் ஒரு கேப்டனாக இருந்து வென்று கொடுத்தவர் தல தோனி. அனைத்துவிதமான ஐசிசி கோப்பை தொடரையும் வென்ற ஒரே ஒரு கேப்டன் இவர் மட்டுமே.

இந்நிலையில், அவரது தலையில் மேலும் ஒரு மகுடம் சூட்டப்பட்டுள்ளது. தற்போது ஜார்கண்ட் கிரிக்கெட் வாரியத்தின் தெற்கு முனை தோனியின் பெயரால் அழைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதற்கு
M.S.Dhoni Pavilion என்றும் பெயரிடப்பட்டு உள்ளது.

 

View this post on Instagram

Only Proud MS Dhoni fans are allowed to like this Picture!😍 . 🏟 South Pavilion of JSCA will be known as M.S.Dhoni Pavilion. #Dhoni #MSDhoni #TeamIndia #Ranchi

A post shared by MS Dhoni / Mahi7781 (@msdhonifansofficial) on

 

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நிச்சயம் தோனியின் இடம் உறுதியாகிவிட்டதையடுத்து அவரது தற்போதைய பேட்டிங், அணியில் அவரது இடம் குறித்த கேள்விகள், ஐயங்கள் ஆகியவை குறித்து அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் விரிவாகப் பேசியுள்ளார்.

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்திற்கு எம்.எஸ்.கே. பிரசாத் அளித்த பிரத்யேக நேர்காணலில் அவர் பல்வேறு விஷயங்களைப் பேசியுள்ளார். அதில் குறிப்பாக இந்திய அணியில் நுழைய ஒரு வீரருக்கு என்ன குணாம்சங்கள் தேவை என்ற கேள்விக்கு அவர் அச்சமற்ற தன்மையை முதன்மையாகக் குறிப்பிட்டார்.

தோனி தற்போது அணிக்கு எப்படி முக்கியம் என்று பேசிய எம்.எஸ்.கே.பிரசாத், “கடந்த இரண்டு தொடர்களில், ஆஸ்திரேலியா, மற்றும் நியூஸிலாந்தில் மாஹி (தோனி) ஆடிய விதம் அவரிடமிருந்து தெளிவான செய்தியை அறிவிப்பது போல் இருந்தது.  அவர் தன் பாணி ஆட்டத்துக்குத் திரும்பியுள்ளார், அதாவது இயல்பான தன் ஆட்டத்துக்குத் தான் திரும்பியதை அவர் அறிவுறுத்தினார். இந்த தோனியைத்தான் நாம் அறிவோம்.

அவர் தனது முந்தைய அச்சமற்ற அதிரடியைக் காட்டினாலே போதும் நாம் மகிழ்ச்சியடைவோம். அவரிடமுள்ள ஆக்ரோஷ சக்தியை அவர் வெளிப்படுத்தினாலே போதும். சில வேளைகளில் ஆட்டத்தின் கால நேரம் போதாமையினால் அவர் ரன்கள் குறைவாக எடுக்கிறார். இப்போது தொடர்ந்து அவர் ஆடும்போது அவர் டச்சை நாம் பார்க்கிறோம்.

முக்கியமாக உலகக்கோப்பைக்கு முன் அவர் ஐபிஎல் தொடரில் ஆடுகிறார். அவர் அதி தீவிரமான ஒரு 14-16 ஐபிஎல் போட்டிகளில் ஆடுகிறார். இது அவர் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் அவர் வென்றெடுத்த பார்மின் விரிவாக்கமாக இருக்கும். (அப்போ! அவர் சர்வதேச கிரிக்கெட்டை ஐபிஎல் தொடருக்கான பயிற்சி ஆட்டமாகப் பார்க்கிறாரோ?) அவர் பேட்டிங்கில் எனக்கு முழு திருப்தி உள்ளது” என்றார் எம்.எஸ்.கே. பிரசாத்.

இவரது இந்தப் பதிலையடுத்து கிரிக்  இன்போ கேட்கும்போது,  ‘லார்ட்ஸ் ஒருநாள் போட்டியில் தோனி மந்தமாக ஆடிய போது ரசிகர்கள் அவரைக் கேலி செய்தனர். அதற்கு பிற்பாடு விளக்கமளித்த விராட் கோலி, ஆட்டத்தை தோனி கடைசி வரை எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது என்று விளக்கமளித்தார். தோனியின் பேட்டிங் அப்பொது சற்றே திணறலாக அமைந்தது, அப்போது அணியின் தோனியின் இடம் குறித்த கவலைகள் இருந்ததா?’ என்று ஒரு கேள்வியைப் போட்டார். • SHARE

  விவரம் காண

  டெஸ்ட் அணியில் அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு மீண்டும் இடம் கிடைக்காது: விருதிமான் சஹா!!

  டெஸ்ட் அணியில் அவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு மீண்டும் இடம் கிடைக்காது என்று கூறியுள்ளார் விருதிமான் சஹா!! இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில்...

  பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டும்; சச்சின் சொல்கிறார் !!

  பாகிஸ்தானுடன் இந்திய அணி விளையாட வேண்டும்; சச்சின் சொல்கிறார்  உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுடனான போட்டியை இந்திய அணி புறக்கணிக்க கூடாது என சச்சின்...

  பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா..?

  பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுமா..? காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாகிஸ்தான் ஆதரவு பயங்ரவாத இயக்கமான ஜெய்ஷ்-இ- முகமது நடத்திய தற்கொலை...

  ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விரக்திமான் சஹா !!

  ரிஷப் பண்ட்டை புகழ்ந்த விரக்திமான் சஹா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் சாதனை சதமடித்து...

  அரசு சொல்வதை செய்வோம்: ரவி சாஸ்திரி!!

  புல்வாமா தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதைத் தொடர்ந்து கடும் கண்டனங்கள் பாகிஸ்தானுக்கு எதிராகக் குவிந்து வரும் நிலையில், உலகக்கோப்பைப் போட்டிகளில்...