ஹைதராபாத் கேப்டனில் சிக்கல் ! டேவிட் வார்னரால் இன்னும் 9 மாதங்கள் விளையாட முடியாது ! 1

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடரின் போது ஆஸ்திரேலிய கேப்டன் டேவிட் வார்னருக்கு காயம் ஏற்பட்டது. டேவிட் வார்னரின் காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை என்பதால் அவர் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. 

2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் 14வது ஐபிஎல் சீசன் ஏப்ரல்/மே மாதம் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இந்த 14வது ஐபிஎல் சீசனுக்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

ஹைதராபாத் கேப்டனில் சிக்கல் ! டேவிட் வார்னரால் இன்னும் 9 மாதங்கள் விளையாட முடியாது ! 2

ஐபிஎல் போட்டி நடைபெறும் தேதி மற்றும் இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிசிசிஐ தலைவர் கங்குலி இதற்கான முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். 

 இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் 18ம் தேதி நடைபெற்றது.இந்த மினி ஏலத்தில் கிறிஸ் மோரிஸ் -16.25 கோடி, கைல் ஜாமிசன் – 15 கோடி, மேஸ்வெல் – 15 கோடி, ஜெய் ரிச்சர்ட்ஸன் – 14 கோடி, கிருஷ்ணப்ப கவுதம் – 9.25 கோடி, மெரிடித் – 8 கோடி ஆகியோர் அதிக விலைக்கு எடுக்கப்பட்டார்கள். 

ஹைதராபாத் கேப்டனில் சிக்கல் ! டேவிட் வார்னரால் இன்னும் 9 மாதங்கள் விளையாட முடியாது ! 3

இந்நிலையில், ஐதராபாத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் டேவிட் வார்னர் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். டேவிட் வார்னர் காயம் குணமடைய இன்னும் 6 முதல் 9 மாதங்களாகும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து டேவிட் வார்னர் கூறுகையில் “இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட காயம் மோசமான நிலையில் இருக்கிறது.  நான் மீண்டும் விளையாடுவதற்கு குறைந்தது 6 முதல் 9 மாதங்கள் எடுக்கும்.  தற்போது என்னால் கீழே குனிந்து பந்தை கூட எடுக்க முடியவில்லை. ஓடுவதற்கும் சிரமமாக இருக்கிறது”  என்று கூறியிருக்கிறார். ஒருவேளை டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என்றால் ஐதராபாத் அணியின் அடுத்த கேப்டனாக செயல்படுவது யார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

ஹைதராபாத் கேப்டனில் சிக்கல் ! டேவிட் வார்னரால் இன்னும் 9 மாதங்கள் விளையாட முடியாது ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *