வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களடா..? முடிவுக்கு வந்தது சூதாட்ட வழக்கு !! 1

வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களடா..? முடிவுக்கு வந்தது சூதாட்ட வழக்கு

இந்திய அணி வெற்றிபெறும் வகையில் இலங்கை வீரர்கள் விளையாடியதற்கான எந்த ஆதாரமும் இல்லை என கூறி இலங்கை காவல்த்துறை சூதாட்ட வழக்கை முடித்து வைத்துள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில், இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்திய அணி கோப்பையை வென்று கிட்டத்தட்ட 9 வருடங்களே நிறைவடைந்துவிட்டால் இந்த போட்டி குறித்தான சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்தபாடு இல்லை.

வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களடா..? முடிவுக்கு வந்தது சூதாட்ட வழக்கு !! 2

இலங்கையின் சில குழுக்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் தான் இலங்கை ஆணி தோல்வியடைந்தது என்று சில தினங்களுக்கு முன்பு அந்நாட்டு முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரே கூறும் அளவிற்கு இந்த பிரச்சனை தற்பொழுது இலங்கையில் பூதாகரமாக வெடித்துள்ளது.

இலங்கை முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரின் குற்றச்சாட்டு இலங்கை மட்டுமல்லாது இந்தியாவையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த குற்றச்சாட்டை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககரா திட்டவட்டமாக மறுத்துள்ளார். அரசியல் காரணங்களுக்காக விளையாட்டுத் துறையைக் களங்கப்படுத்த வேண்டாம் என்று கூறியிருந்தார்.

வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களடா..? முடிவுக்கு வந்தது சூதாட்ட வழக்கு !! 3

இந்நிலையில் முன்னாள் அமைச்சரின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தும்படி விளையாட்டுத் துறை அமைச்சர் துலாஸ் அலஹப்பெருமா உத்தரவு பிறப்பித்தார். அதன்படி விசாரணை நடத்தவும் அறிக்கை தாக்கல் செய்யவும் ஜூன் 20ஆம் தேதி விளையாட்டுத் துறை செயலாளர் ருவான்சந்த்ரா தலைமையில் குழு ஒன்று உருவாக்கப்பட்டது.

இந்த புலனாய்வு குழு சங்ககாரா, தரங்கா போன்ற முன்னாள் வீரர்கள் பலரிடம் இது குறித்து விசாரணை நடத்தியது. குறிப்பாக இலங்கை அணியின் அப்போதைய கேப்டனான குமார சங்ககாராவிடம் நேற்று மட்டும் ஏறத்தாழ 11 நேரம் விசாரித்தது.

விசாரணையின் முடிவில் இலங்கை வீரர்கள் இந்திய அணி வெல்ல அனுமதித்ததற்கான எந்த ஆதாரத்தையும் கண்டுபிடிக்கவில்லை என்று தெரிவித்த இலங்கை போலீசார் வழக்கை கைவிட்டனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *