இந்தியா இலங்கை 2017 : இந்திய வீரர்கள் வெற்றி பெற்ற பிறகு கூறியது 1

இலங்கைக்கு எதிரான கடைசி மற்றும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 171 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என இலங்கையை வொயிட் வாஷ் செய்து இந்தியா கைப்பற்றியுள்ளது.

இந்தியா- இலங்கை அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 12ம் திகதி பல்லேகலேவில் தொடங்கியது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தவான் மற்றும் பாண்டியாவின் அதிரடியால் முதல் இன்னிங்சில் 487 ஓட்டங்கள் குவித்தது.இதனையடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இலங்கை அணி, இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் 135 ஓட்டங்களில் சுருண்டு பாலோ ஆன் ஆனது.

இலங்கை தரப்பில் அணித்தலைவர் சந்திமால் அதிகபட்சமாக 48 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், முகமது ஷமி, அஸ்வின் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.352 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், மூன்றாவது நாள் 2-வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 181 ஓட்டங்களுக்கு சுருண்டு இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. இந்திய தரப்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டும், ஷமி மூன்று விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இலங்கையை சொந்த மண்ணில் வொயிட் வாஷ் செய்ததின் மூலம் 85 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

புஜாரா கூறியது :

நாங்கள் சிறப்பாக விளையாடி அதிக ரன்களை சேர்த்தோம், வீரர்களுடன் ஜோடி சேர்த்து சிறப்பாக விளையாடி திறமைகளை வெளி படுத்தினோம் இதுவே எங்கள் வெற்றிக்கு காரணம்.

குலதீப் யாதவ் கூறியது : இந்த போட்டியில் நான் விளையாடியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, அனைத்து வீரர்களும் எனக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார்கள், இந்த மைதானத்தில் பந்து வீச்சு சிறப்பாக இருந்தது இதனால் தான் அதிக விக்கெட்களை என்னால் எடுக்க முடிந்தது, அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார்கள் இதனால் தான் நாங்கள் வெற்றிபெற்றோம் .

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *