India's Lokesh Rahul plays a shot during the first day's play of their third cricket test match against Sri Lanka in Pallekele, Sri Lanka, Saturday, Aug. 12, 2017. (AP Photo/Eranga Jayawardena)

இதுவரை டெஸ்ட் போட்டியில் கே.ஏல்.ராகுல் தொடர்ந்து ஆறு முறை அரை சதம் அடித்து சாதனை படைத்து உள்ளார்.

நீண்ட நாடுகளுக்கு பிறகு இந்திய அணியின் மிகவும் திறமை வாய்ந்த வீரர்களுள் ஒருவரான கே.எல்.ராகுல் தற்போது காயத்தில் இருந்து மீண்டு இந்திய அணியில் இடம் பிடித்தார்.

முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக கே.எல்.ராகுல் அணியில் இடம் பெறவில்லை ஆனால் தற்போது காயம் குணம் அடைந்து விட்டதால் கே.எல்.ராகுல் மீண்டும் அணிக்கு திரும்பி விட்டார்.

கே.எல்.ராகுல் படைத்த சாதனை :

57 vs இலங்கை – கொழும்பு
51* vs ஆஸ்திரேலியா – தரமசாலா
60 vs ஆஸ்திரேலியா – தரமசாலா
67 vs ஆஸ்திரேலியா – ராஞ்சி
51 vs ஆஸ்திரேலியா – பெங்களூர்
90 vs ஆஸ்திரேலியா – பெங்களூர்

இன்றய ஆட்டத்தின் விவரம் :

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் கே.எல். ராகுல், ஷிகர் தவன் ஆகியோர் இடம்பிடித்துள்ளார்கள். அபினவ் முகுந்த் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ராகுலும் தவனும் மிகவும் சுறுசுறுப்பாக விளையாடினார்கள். இதனால் இந்திய அணி 52 பந்துகளில் 50 ரன்களை எட்டியது. முதல் டெஸ்ட் போல இங்கும் வேகமாக ரன்களை அடிக்க முயன்ற தவன், 35 ரன்களில் பெரேரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு புஜாராவும் ராகுலும் தொடர்ந்து சுறுசுறுப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தார்கள். இந்திய அணி 26.5 ஓவர்களில் 100 ரன்களைச் சேர்த்தது.

முதல்நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 28 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 52, புஜாரா 14 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

இந்தியா இலங்கை தொடர் 2017 : இன்றைய ஆட்டத்தில் சாதனை படைத்த கே.எல்.ராகுல் 1

இதன்பின்னர் துரதிர்ஷ்டவசமாக 57 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார் ராகுல். பின்னர் வந்த கோலி நம்பிக்கையுடன் தொடங்கினாலும் 13 ரன்களில் ஹெராத் பந்துவீச்சில் வெளியேறி ஏமாற்றமளித்தார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த புஜாரா – ரஹானா ஆகிய இருவரும் மிகவும் பொறுப்புடன் விளையாடினார்கள். புஜாரா 112 பந்துகளில் அரை சதம் எடுத்தார். இருவருடைய கூட்டணி சற்று வேகமாகவும் ரன்களைக் குவித்ததால் 4-வது விக்கெட்டுக்கு 104 பந்துகளில் 100 ரன்களைச் சேர்த்தார்கள். அதிலும் அரை சதம் எடுத்தபிறகு புஜாராவின் ஆட்டம் வேகமெடுத்தது.

முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 58 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் எடுத்தது. புஜாரா 89, ரஹானே 41 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இதன்பிறகு 164 பந்துகளில் 100 ரன்களைப் பூர்த்தி செய்தார். இது அவருடைய 13-வது சதமாகும். இலங்கையில் அவர் அடிக்கும் 3-வது சதமாகும். தன்னுடைய 50-வது டெஸ்டை விளையாடும் புஜாரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்களைக் கடந்தார். டிராவிட் போல புஜாராவும் 84-வது இன்னிங்ஸில் 4000 ரன்களைக் கடந்தார். சுனில் கவாஸ்கர், சேவாக் ஆகிய இருவரும் 81 இன்னிங்ஸில் 4000 ரன்களைக் கடந்து இந்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார்கள். அடுத்த வரிசையில் உள்ள டிராவிடுடன் இணைந்துள்ளார் புஜாரா.

Cricket, India, Sri Lanka, KL Rahul, Cheteshwar Pujara, Ajinkya Rahane

இதன்பிறகு புஜாரா – ரஹானே கூட்டணி 273 பந்துகளில் 200 ரன்கள் சேர்த்தது. புஜாராவுக்கு நல்ல இணையாக அமைந்த ரஹானேவும் சதமடித்து அசத்தினார். அவர் 151 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்தார்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்து வலுவான நிலையை அடைந்துள்ளது. புஜாரா 128, ரஹானே 103 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

 

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *