வாங்கிய அடியை மறந்துவிட்டு மீண்டும் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி !! 1

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

வாங்கிய அடியை மறந்துவிட்டு மீண்டும் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி !! 2

கொழும்பில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இலங்கை அணியின் கேப்டன் ஷானாகா, கடந்த போட்டியை போலவே இந்த போட்டியிலும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, கடந்த போட்டியில் விலையாடிய அதே வீரர்களே இன்றைய போட்டிக்கான ஆடும் லெவனிலும் இடம்பெற்றுள்ளனர்.

அதே வேளையில் இன்றைய போட்டிக்கான இலங்கை அணி ஒரு மாற்றத்துடன் களமிறங்கியுள்ளது. உடானா அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக கசுன் ரஜிதா என்னும் வீரர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வாங்கிய அடியை மறந்துவிட்டு மீண்டும் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி !! 3

இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி;

ப்ரித்வி ஷா, ஷிகர் தவான் (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), மணிஷ் பாண்டே, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, க்ரூணல் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ்.

இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இலங்கை அணி;

அவிக்‌ஷா பெர்னாண்டோ, மினோட் பனுகா, பனுகா ராஜபக்சே, டி சில்வா, சாரித் அஸ்லான்கா, தசுன் ஷனாகா, வானிந்து ஹசராங்கா, சாமிகா கருணாரத்னே, துஸ்மந்தா சம்மீரா, லக்‌ஷன் சண்டாகன், கசுன் ரஜிதா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *