நம்பிக்கையின் மறு உருவம் இவர் தான்; இளம் வீரரை புகழ்ந்து பேசிய முன்னாள் வீரர் !! 1

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பேட்டிங்கில் மாஸ் காட்டிய தீபக் சாஹரை முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.

நம்பிக்கையின் மறு உருவம் இவர் தான்; இளம் வீரரை புகழ்ந்து பேசிய முன்னாள் வீரர் !! 2

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ப்ரித்வி ஷா, ஷிகர் தவான், இஷான் கிஷன், மணிஷ் பாண்டே போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.

நம்பிக்கையின் மறு உருவம் இவர் தான்; இளம் வீரரை புகழ்ந்து பேசிய முன்னாள் வீரர் !! 3

நீண்டநேரம் தன்னந்தனியாக போராடிய சூர்யகுமார் யாதவும் 53 ரன்களில் விக்கெட்டை இழந்துவிட்டதால், இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என கருதப்பட்ட நிலையில், 8வது விக்கெட்டுக்கு களமிறங்கிய தீபக் சாஹர் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மிரளவைக்கும் வகையிலான விளையாட்டை வெளிப்படுத்தினார்.

இலங்கை அணியின் பந்துவீச்சை அசால்டாக எதிர்கொண்ட தீபக் சாஹர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 82 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 49வது ஓவரின் முதல் பந்திலேயே இலக்கை எட்டிய இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றியை பதிவு செய்தது.

நம்பிக்கையின் மறு உருவம் இவர் தான்; இளம் வீரரை புகழ்ந்து பேசிய முன்னாள் வீரர் !! 4

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பேசு பொருளாக மாறியுள்ள தீபக் சாஹரை முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “நம்பிக்கை என்ற வார்த்தைக்கு தீபக் சாஹர் சிறந்த எடுத்துக்காட்டு. தீபக் சாஹர் தான் தன்மீது வைத்திருக்கும் சுயநம்பிக்கையின் மூலமே சிறப்பாக விளையாடுகிறார். 10 வருடங்களுக்கு முன்பு நான் தீபக் சாஹரை சந்தித்த போதே என்னால் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட முடியும், பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் அசால்டாக அடிக்க முடியும் என கூறினார். தீபக் சாஹருடன் எப்பொழுது பேசினாலும் பந்துவீச்சோடு சேர்த்து பேட்டிங் குறித்தும் தான் பேசுவார். தீபக் சாஹர் ஒவ்வொரு ஷாட்டிற்கும் சரியான திசையை தேர்வு செய்தே அடிக்கிறார், இது அதிர்ஷ்டத்தால் நடப்பவை அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா இலங்கை இடையேயான கடைசி ஒருநாள் போட்டி ஜூலை 23ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *