தோனி, ஏபிடி, கோலி, கெயில் இவங்க யாருமே இல்லை ! இவர்தான் தான் பெஸ்ட் ! ஶ்ரீகாந்த் கைகாட்டிய வீரர் யார் தெரியுமா ? 1

2008 முதல் தற்போது வரை சிறப்பாக நடைபெற்று உலகப் புகழ் பெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் இதுவரை 13 சீசன்கள் முடிவடைந்து. இந்த ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்திதியன்ஸ் அணி 5 முறை கோப்பைகளை வென்று அசைக்க முடியாத அணியாக இருக்கிறது.

இதையடுத்து தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 3 முறை கோப்பைகளை வென்றுள்ளது. இதையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறை கோப்பைகளை வென்றிருக்கிறது. இதன்பிறகு ஹைதராபாத், ராஜஸ்தான், டெக்கான் அணிகள் ஒரு முறை கோப்பைகளை வென்றுள்ளது.

தோனி, ஏபிடி, கோலி, கெயில் இவங்க யாருமே இல்லை ! இவர்தான் தான் பெஸ்ட் ! ஶ்ரீகாந்த் கைகாட்டிய வீரர் யார் தெரியுமா ? 2

இந்தாண்டு நடைபெற்று வரும் 14வது ஐபிஎல் சீசனில் இதுவரை 13 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் ஆர்சிபி அணி விளையாடிற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்திலும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் இருக்கிறது.

மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதிய 9வது லீக் போட்டியில் மும்பை 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் அணி இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வி அடைந்துள்ளது. ஆனால் ஹைதராபாத் ஸ்பின்னர் ரஷித் கான் மட்டுமே தொடர்ந்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் இவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

தோனி, ஏபிடி, கோலி, கெயில் இவங்க யாருமே இல்லை ! இவர்தான் தான் பெஸ்ட் ! ஶ்ரீகாந்த் கைகாட்டிய வீரர் யார் தெரியுமா ? 3

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பிரபல தமிழ் வர்ணனையாளராக இருந்து வரும் ஶ்ரீகாந்த் ஐபிஎல்லில் சிறந்த வீரர் ஒருவரை தேர்வு செய்துள்ளார். ஆனால் தோனி, கோலி, சுரேஷ் ரெய்னா, மலிங்கா, கெயில் ஆகியோரை அவர் தேர்வு செய்யவில்லை. சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானை தேர்வு செய்திருக்கிறார்.

“ரஷித் கான் தான் ஐபிஎல் தொடரில் சிறந்த வீரர். இவர் தனது பந்துவீச்சில் மும்பை அணியை 150 ரன்களுக்குள் சுருட்ட ஹைதராபாத் அணிக்கு உதவியாக இருந்திருக்கிறார். சேப்பாக்கத்தில் இந்த முறை பல த்ரில் சம்பவங்கள் நடந்து வருகிறது” என்று ட்விட் செய்திருக்கிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *