ஸ்டீஃபன் பிளெமிங் எம்.எஸ். டோனிக்கு புகழாரம் 1
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பந்தை சிக்ஸருக்கு அடிக்கும் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி ஞாயிற்றுக்கிழமை போட்டியில் தோல்வி அடைந்திருந்தாலும், அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் அவரது அணியின் செயல்பாடுகளை பாராட்டியுள்ளார், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றிபெற போராடிய  வழிமுறையைப் பற்றி மகிழ்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும் அந்த அணி நூலிலையில் தோல்வியை தழுவியது.

ஸ்டீஃபன் பிளெமிங் எம்.எஸ். டோனிக்கு புகழாரம் 2

சி.எஸ்.கே. அணி இதற்கு முந்தைய போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 165 ரன்கள் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 202 ரன்களை வெற்றிகரமாக துரத்தி வெற்றி பெற்றது. மீண்டும் ஒரு பெரிய இலக்கை துரத்தி வெற்றிபெறும் முயற்சியில் சி.எஸ்.கே. அணி தோல்வியுற்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சி.எஸ்.கே. அணியின் கேப்டன் தோனி 79 ரன்கள் எடுத்து இறுதிவரை வெற்றிக்குப் போராடினார். இந்த முயற்சியில் வெற்றிப் பெற்றிருந்தால் அது சி.எஸ்.கே. அணியின் முன்றாவது சேஸிங் ஆக அமைந்திருக்கும்.

தோனியின் ஆட்டத்தை பிளெமிங் புகழ்ந்தாலும், அவர் இந்த போட்டி க்றிஸ் கெயிலின் ஆட்டமாகவே அமைந்திருந்தது என்றும், கெயில் ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டார் என்றும் குறிப்பிட்டார்.

ஸ்டீஃபன் பிளெமிங் எம்.எஸ். டோனிக்கு புகழாரம் 3

மேலும் அவர் “ கெயில் மிகவும் அதிரடியாக விளையாடினார், நாங்கள் அவரை அவரது அதிரடி ஆட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அவுட் ஆக்கிவிடலாம் என்று நினைத்தோம், இருப்பினும் 200 ரன்களுக்குள் அவர்களை கட்டுபடுத்தினோம், இரண்டாம் பாதியில் எங்களது பந்துவீச்சு சிறப்பாக இருந்தது, ஆனாலும் 196 ரன்கள் என்பதும் பெரிய இலக்கே, இதை விட அதிக ரன்கள் அவர்கள் குவித்திருக்கக் கூடும் அந்த  நிலையில் இருந்து அவர்களை கட்டுபடுத்தியது சிறந்த விஷயம்” என்று கூறினார்.

ஸ்டீஃபன் பிளெமிங் எம்.எஸ். டோனிக்கு புகழாரம் 4

சி.எஸ்.கே.வின் துவக்க விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்து அந்த அணி 7 ஒவர்களில் 56/3 என்ற நிலையில் இருந்ததது. அப்போது ஜோடி சேர்ந்த ராயுடு மற்றும் தோனி 57 ரன்களை 4வது விக்கெட்டுக்கு சேர்த்து நல்ல அடித்தளம் அமைத்தனர். பின்னர் வந்த ஜடேஜாவுடனும் தோனி ஜோடி சேர்ந்து 50 ரன்கள் எடுத்தார்.

ஸ்டீஃபன் பிளெமிங் எம்.எஸ். டோனிக்கு புகழாரம் 5

“சேஸிங்கின் போது எங்களது தடுமாற்றம், கெயில் பேட்டிங்கின் போது நாங்கள் தடுமாறியது போலவே துவக்கம் அமைந்தது. இருப்பினும் தோனி அணியை மீட்டெடுத்து வெற்றிக்கு மிக அருகில் எடுத்துக் சென்றார். மிகச்சிறந்த கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதில் கெயில் மற்றும் தோனி ஆகிய இரு சீனியர் வீரர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டனர்.” என்றும் பிளெமிங் தெரிவித்தார்.

ஆட்டத்தின் போது தோனியின் முதுகு பகுதியின் பிரச்சினையின் காரணமாக அவர் அவதிப்பட்டார். இருப்பினும் அவர் தொடர்ந்து விளையாடி 34 பந்துகளில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுக்க முடியாமல் போனதிற்கு மோஹிட் ஷர்மாவின் அந்த இரண்டு ஒய்ட் யார்க்கர் காரணமாக அமைந்தது. அது பஞ்சாப் அணிக்கு வெற்றியை தேடித்தந்தது.

ஸ்டீஃபன் பிளெமிங் எம்.எஸ். டோனிக்கு புகழாரம் 6

மேலும் பிளெமிங், “சேஸிங்கின் போது கடின சூழ்நிலையில் விளையாடும்போது, நாம் அதில் எடுக்கும் கடின முயற்சிகளை சிறப்பான முறையில் கையாள தெரிந்திருக்க வேண்டும், அதை தோனி மிகக் சிறப்பாக செய்தார். மோஹிட் ஷர்மாவின் அந்த அருமையான இரண்டு யார்க்கர்கள் எங்களின் வெற்றியைத் தடுத்துவிட்டது. சி.எஸ்.கே. வின் செயல்பாடுகள் இந்த போட்டியில் சிறப்பாக இருந்தாலும், எங்களை மெருகேற்றி கொள்ள வேண்டிய இடங்களும் உள்ளன.” என்றார்.

ஸ்டீஃபன் பிளெமிங் எம்.எஸ். டோனிக்கு புகழாரம் 7

“ஒரு அணியை 140 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி அதை சேஸ் செய்வதையே விரும்புகிறேன். ஆனால் போட்டி என்பது இருப்பக்கமும் சார்ந்தது. துவக்க விக்கெட்டுகள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன. நாம் அதன் முக்கியத்துவத்தை பார்த்திருக்கிறோம் . நாம் சரியான விகிதத்தில் வீரர்கள்  இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.  அதில் நாங்கள் மிக தொலைவில் இல்லை. எங்கள் தவறுகள் மேம்படுத்தக் கூடியவையே. சி.எஸ்.கே. அணிக்கு அதன் ஹோம் கிரவுண்ட் தொடர்பான சில பிரச்சினைகள், மற்றும் எங்களின் சில வீரர்கள் காயமடைந்த போதிலும், மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகள் பெற்றுள்ளோம்.” என்றும் பிளெமிங் கூறினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *