சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய தொடக்க வீரரா ? பதில் சொன்ன ஸ்டீபன் ஃப்ளெமிங் 1

14வது ஐபிஎல் சீசனின் 8வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுது. இந்த போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும், கே எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட்களை இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் தமிழக வீரர் ஷாருக்கான் தனியாளாக நின்று 47 ரன்கள் குவித்து கொடுத்து இருக்கிறார். சிஎஸ்கே பவுலர்கள் தீபக் சஹார் 4, சாம் கரன், மொயின் அலி, பிராவோ தலா ஒரு விக்கெட் எடுத்து இருக்கின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய தொடக்க வீரரா ? பதில் சொன்ன ஸ்டீபன் ஃப்ளெமிங் 2

இதையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சிஎஸ்கே அணி 15.4 ஓவரிலே இலக்கை எட்டி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து இருக்கின்றனர். இதில் டூபிளெசிஸ் 36 ரன்களும், மொயின் அலி 46 ரன்களும் அடித்து இருக்கின்றனர். பஞ்சாப் சார்பாக முகமது ஷமி 2 விக்கெட்களை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், 2020 ஐபிஎல்லில் அறிமுகமான சிஎஸ்கேவின் ஓப்பனர் ருத்ராஜ் கெய்க்வாட் தற்போது நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் . டெல்லிக்கு எதிரான முதல் போட்டியில் ரூத்ராஜ் 8 பந்தில் 5 ரன்கள், மற்றும் ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றயை போட்டியில் 16 பந்தில் 5 ரன்கள் மட்டுமே குவித்து விக்கெட் இழந்து இருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய தொடக்க வீரரா ? பதில் சொன்ன ஸ்டீபன் ஃப்ளெமிங் 3

இதனால் இவருக்கு பதிலாக உத்தப்பா மற்றும் புஜாரா அடுத்த போட்டியில் விளையாடுவார்கள் என்ற பேசப்பட்டு வந்தது. ஆனால் இதற்கு முடிவு கட்டும் விதமாக சிஎஸ்கே கோச் ஃப்ளெமிங் சிஎஸ்கேவின் ஓப்பனராக ரூத்ராஜ் தான் களமிறங்குவார் என்று கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசிய ஃப்ளெமிங் ” இந்த வருடம் சமநிலையான அணி அமைந்ததை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

ரூத்ராஜ் கெய்க்வாட் சிறந்த வீரர். இவர் முதல் போட்டியில் சிறப்பாக பந்துகளை எதிர் கொண்டார் மற்றும் நேற்றயை போட்டி சற்று கடிமானமாக இருந்தது. தனது சிறப்பான ஆட்டதின் மூலம் கடந்த ஆண்டு ஐபிஎல்லில் நம்பிக்கையை ஏற்படுத்தினார். வீரர்களை தேர்வு செய்யும் போது எங்களது கொள்கை என்னவென்றால் அணியில் இருக்கும் வீரர்களை ஆதரிப்பது. ரூத்ராஜ் மற்றும் டூபிளெசிஸ் ஜோடியை நாங்கள் ஆதரித்து வருகிறோம்” என்று ஸ்டீபன் ஃப்ளெமிங் கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய தொடக்க வீரரா ? பதில் சொன்ன ஸ்டீபன் ஃப்ளெமிங் 4
stephen

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *