ஸ்டீவ் ஸ்மித் அபார சதம், சச்சின் சாதனை முறியடிப்பு!! 1
(Photo Source: Getty Images)

பெர்த்தில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்த ஸ்டீவன் ஸ்மித் பல்வேறு சாதனைகளை தன் வசமாக்கியுள்ளார்.

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் 3-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 403 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 403 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணியின் மலன் 140 ரன்களும் பர்ஸ்டோவ் 119 ரன்களும் குவித்தனர்.

ஸ்டீவ் ஸ்மித் அபார சதம், சச்சின் சாதனை முறியடிப்பு!! 2
Head-on: Jonny Bairstow marks his century by nuzzling his helmet, Australia v England, 3rd Test, Perth, 2nd day, December 15, 2017

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய 2–வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் 92 ரன்னுடனும், ஷேன் மார்ஷ் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ஸ்மித் சதம் அடித்தார். அவர் 138 பந்தில் 16 பவுண்டரி, 1 சிக்சருடன் சதத்தை பதிவு செய்தார். இது அவருக்கு டெஸ்டில் 22-வது சதமாகும். மேலும் இந்த வருடத்தில் டெஸ்டில் 1000 ரன்களை கடந்துள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் அபார சதம், சச்சின் சாதனை முறியடிப்பு!! 3
PERTH, AUSTRALIA – DECEMBER 16: Mitch Marsh of Australia bats during day three of the Third Test match during the 2017/18 Ashes Series between Australia and England at WACA on December 16, 2017 in Perth, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

இந்த சதம் மூலம் 22 சதங்களை அதிவேகமாக அடித்த 3-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். டான் பிராட்மேன் 58 இன்னிங்சில் 22 சதங்கள் அடித்துள்ளார். இந்திய டெஸ்ட் ஜாம்பவான் கவாஸ்கர் 101 இன்னி்ங்சில் அடித்துள்ளார். தற்போது ஸ்மித் 108 இன்னிங்சில் அடித்து 3-வது இடத்தில் உள்ளார். தெண்டுல்கர் 114 இன்னிங்ஸ் உடன் 4-வது இடத்தில் உள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித் அபார சதம், சச்சின் சாதனை முறியடிப்பு!! 4
PERTH, AUSTRALIA – DECEMBER 16: Steve Smith of Australia celebrates with Shaun Marsh of Australia after reaching his century during day three of the Third Test match during the 2017/18 Ashes Series between Australia and England at WACA on December 16, 2017 in Perth, Australia. (Photo by Ryan Pierse/Getty Images)

மேலும், தொடர்ந்து நான்கு வருடமாக டெஸ்ட் போட்டியில் 1000 ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ஹெய்டன் தொடர்ந்து நான்கு வருடங்கள் 1000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். தற்போது ஸ்மித் 2014, 2015, 2016 மற்றும் இந்த வருடத்தில் 1000 ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published.