ஸ்டீவ் ஸ்மித் காயம் , முதல் டி20 போட்டியில் விளையாட மாட்டார் 1

இந்திய ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டிபால் கொண்ட டி20 தொடர் இன்று மாலை 6 மணிக்கு ரான்ச்சி மைதானத்தில் துவங்குகிறது. ஏற்கெனவே ஒருநாள் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இழந்துள்ளது ஆஸ்திரேலியா அணி.

கடந்த ஒரு வார்த்தை ஓய்வுற்குப் பின் நேற்று இரு அனி வீரர்களும் மைதானதிற்கு வலைப்பயிற்சி செய்ய முனைந்தனர். ஆனால், நேற்று லேசான மழை காரணமாக இது அணி வீரர்களும் பயிற்ச்சி நேரத்தை பயன்படுத்த வில்லை.

தற்போது இது போன்ற இரு சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அனி கேப்டன் ஸ்மித் தோல்பட்டை காயம் காரணமாக முதல் போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனபிஹா செய்தியை ஆஸ்திரேலிய அணியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.ஸ்டீவ் ஸ்மித் காயம் , முதல் டி20 போட்டியில் விளையாட மாட்டார் 2

அவர் கண்டிப்பாக விளையாடுவாரா மாட்டாரா? எனபது டாஸிற்கு முன் தெரிவிக்கப்படும். அவர் விளையாடாத பட்சத்தில் டேவிட் வார்னர் கேப்டனாக பதவிஏற்பார்.

மேலும், ஒருநாள் தொடரில் கடைசி மூன்று போட்டிகளில் விளையாடாத க்ளென் மேக்ஸ்வெல் அணியில் களமிரக்கப்பட்டு பேட்டிங் ஆடர் மாற்றியைக்கப்படும் எனத் தெரிகிறது.

ஸ்மித் ஒருநாள் தொடரில் பெரிதாக ஏதும் சோபிக்கவில்லை. அணிக்கு கேப்டனாகஅ ஒருந்து வெறும் 142 ரன் மட்டுமே அடிட்டுள்ளார். கடைசி டி20 உலககோப்பைக்குப் பின் அவர் டி20 போட்டிகளில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மித் இதுவரை டி20 போட்டிகளில் 21.55 சராசரியில் 435 ரன் அடித்தத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டிக்கான இந்திய வீரர்களின் பயிற்சி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை 4-1 என இழந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.

இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி நாளை முன்னாள் கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் துவங்குகிறது. இந்நிலையில் இன்று முதல் டி-20 போட்டிக்கான பயிற்சியில் இந்திய வீரர்கள் திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் அங்கு தொடர் மழை பெய்ததால், இந்திய அணியினரின் பயிற்சி ரத்து செய்யப்பட்டது. இது இந்த பருவகாலத்தில் சகஜம் தான். ஆனால் இதனால் போட்டிக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாது என மைதான அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியை பற்றிய செய்தி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடருக்கு அணியில் ஆஷிஷ் நெஹ்ரா இடம் பெற்றார். ஒருநாள் போட்டிகளில் விளையாடாத ஷிகர் தவான் மற்றும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார்கள்.

ஆஸ்திரேலிய அணியை பற்றிய செய்தி:என்னதான் கேப்டனுக்கு காயம் ஏற்பட்டாலும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஆஸி. அணியின் தொடக்கவீரர்களான டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்சையே நம்பியுள்ளார்கள். 4வது ஒருநாள் போட்டியில் அவர்கள் நல்ல தொடக்கத்தை கொடுத்தார்கள்.

இந்திய அணி: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்டிக் பாண்டியா, லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, எம்.ஸ். தோனி, கேதார் ஜாதவ், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்த்ர சஹால், ஆஷிஷ் நெஹ்ரா, புவனேஸ்வர் குமார், ஜேஸ்ப்ரிட் பும்ரா.

ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், ஸ்டீவ் ஸ்மித், ஜேசன் பெஹ்ராண்டோப், டேனியல் கிறிஸ்டின், நாதன் கவுண்டர்-நைல், பேட் கம்மின்ஸ், டிராவிஸ் எட், மொய்சஸ் ஹென்றிக்ஸ், க்ளென் மேக்ஸ்வெல், டிம் பெயின், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் சம்பா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *