Cricket, Steve Smith,
பந்தை சேதப்படுத்தும் சம்பவத்தில் டேவிட் வார்னரும், ஸ்டீவ் ஸ்மித்தும் ஈடுபடுவது முதல்முறை அல்ல, ஏற்கெனவே உள்நாட்டு போட்டிகளில் இதுபோல் செய்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது என்று போட்டி நடுவர் டேர்ல் ஹார்பர் பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார்.

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்டதால் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பென்க்ராப்ட் ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளது ஆஸ்திரேலியா.

இந்த செயல் செய்ததை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள், ஆஸ்திரேலிய வீரர்கள் மீது கோப பட்டனர். ஆனால், வீரர்கள் பேட்டி அளிப்பதை பார்த்ததும் அனைவரும் வருத்த படுகிறார்கள். பேட்டியின் போது ஸ்டீவ் ஸ்மித் அழுத காட்சி, கிரிக்கெட் ரசிகர்களை வருத்தத்திற்குள் ஆளாக்கியது.

தன்னுடைய இளம் ரசிகருக்கு போன் செய்து மன்னிப்பு கேட்ட ஸ்டீவ் ஸ்மித் 1
SYDNEY, NEW SOUTH WALES – MARCH 29: An emotional Steve Smith is comforted by his father Peter as he fronts the media at Sydney International Airport on March 29, 2018 in Sydney, Australia. Steve Smith, David Warner and Cameron Bancroft were flown back to Australia following investigations into alleged ball tampering in South Africa. (Photo by Brook Mitchell/Getty Images)

பேட்டியின் போது ஸ்டீவ் ஸ்மித் அழுததால், அவரின் தீவிர இளம் ரசிகர் ஒருவர் அழுது விட்டார். இந்த செய்தி ஸ்டீவ் ஸ்மித்திற்கு தெரிந்ததும், அந்த ரசிகருக்கு போன் செய்து மைதானத்தில் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டார் ஸ்டீவ் ஸ்மித்.

தன்னுடைய இளம் ரசிகருக்கு போன் செய்து மன்னிப்பு கேட்ட ஸ்டீவ் ஸ்மித் 2
First talking of Warne, he is currently commentating in the ongoing Australia-South Africa series and will fly to India after the end of the Test match, which starts today (March 30).
Already, there is no clarity on his role in the team.
Reports, earlier, had suggested that he might leave the camp mid-way the tournament.
However, any news on this is yet to be confirmed.

தனது மகன் அழுவதாக, பெற்றோர் டார்சி ட்விட்டரில் தெரிவித்தார். ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டியை பார்த்து அழ தொடங்கிய தனது மகனின் அழுகையை நிறுத்துவதற்கு 20 நிமிடத்திற்கும் மேல் ஆனது என ஸ்டீவ் ஸ்மித் ரசிகனின் தந்தை ட்விட்டரில் பதிவு செய்திருந்தார்.

தன்னுடைய இளம் ரசிகருக்கு போன் செய்து மன்னிப்பு கேட்ட ஸ்டீவ் ஸ்மித் 3
TOPSHOT – Cricketer Steve Smith reacts at a press conference at the airport in Sydney on March 29, 2018, after returning from South Africa.

டார்சியின் ட்வீட் ட்விட்டரில் பரவியதால், அந்த ட்வீட் ஸ்டீவ் ஸ்மித்தின் கண்ணிற்கும் தென்பட்டது. இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான ஸ்மித் தனது இளம் ரசிகருக்கு போன் செய்து பேசியிருக்கிறார். பிறகு, ஸ்டீவ் ஸ்மித் போன் செய்து பேசியதாகவும் டார்சி ட்விட்டரில் பதிவு செய்தார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published.