மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தவறுதலாக பந்தில் எச்சில் தடவியதை கண்டுபிடித்த நடுவர் உடனடியாக சானிடைசர் மூலம் பந்தை துடைத்துவிட்டார். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து  இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் இருக்கும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பகலிரவு போட்டியாக  நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் வெறும் 112 ரன்கள் மட்டுமே குவித்தனர்.

இங்கிலாந்து வீரர்கள் இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து வந்தனர். இதில் கிராலி அடித்த 53 ரன்கள் தான் அதிகபட்சமாக இருக்கிறது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 99 ரன்கள் குவித்து 3 விக்கெட்டுகளை இழந்தது. இன்றை இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 46 ரன்கள் குவிப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது.

இறுதி டெஸ்டில் இவர்கள் அதிரடி காட்டுவார்கள் ! உறுதியாக கூறும் விவிஎஸ் லட்சுமணன் ! 2

இதனால் இந்திய அணி மொத்தமாக 145 ரன்கள் குவித்து 33 ரன்கள் மட்டுமே முன்னிலை வகித்தது. இதன் பிறகு தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி  30 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 81 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதனால் இந்திய அணிக்கு 47 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகச்சிறிய இலக்கு கிடைத்திருக்கிறது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 7.4  ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. இதில் ரோகித் சர்மா 25 ரன்களும் சுப்மன் கில் 15 ரன்களும் குவித்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி 2 – 1 என்று முன்னிலை வைத்திருக்கிறது.

இங்கிலாந்து வீரரின் இந்த செயலால் உடனடியாக சானிடைசர் பயன்படுத்திய நடுவர் ! 2

இந்நிலையில், இந்த போட்டியின் போது இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தவறுதலாக பந்தில் எச்சில் தடவியதை கண்டுபிடித்த நடுவர் உடனடியாக சானிடைசர் மூலம் பந்தை துடைத்து விட்டார். கொரோனா வைரஸ் காரணமாக வீரர்கள் பந்தில் எச்சில் தடவ தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் பென் ஸ்டோக்ஸ் இதனை தவறுதலாக செய்ததால் நடுவர் அவாருக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளனர். பென் ஸ்டோக்ஸின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *