ஐபிஎல்லின் உயிர்நாடியே இவர்கள் தான், இவங்க இல்லைனா நல்லாவே இருக்காது ! - ஸ்டோக்ஸ் வேதனை 1

ராஜஸ்தான் அணியில் விளையாடி வரும் பென் ஸ்டோக்ஸ் தற்போது கொரோனா காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி கொடுக்கததால் வருத்தம் தெறிவித்துள்ளார்.

14ஆவது ஐபிஎல் சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே இருப்பதால் அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சீசனில் 8 அணிகளும் புதிய வீரர்களை ஏலத்தில் எடுத்து பலமாக உள்ளது.

ஐபிஎல்லின் உயிர்நாடியே இவர்கள் தான், இவங்க இல்லைனா நல்லாவே இருக்காது ! - ஸ்டோக்ஸ் வேதனை 2

முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் மும்பையில் மோதுகிறது. 

இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக வீரர்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பிசிசிஐ கடுமையான பயோ பப்புள் விதிமுறைகளை விதித்து இருக்கிறது. மற்றொரு பக்கம் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் அனைவரும் அனைத்து அணிகளுக்கும் உரிய ஆலோசனைகளை கூறி வருகின்றனர். 

ஐபிஎல்லின் உயிர்நாடியே இவர்கள் தான், இவங்க இல்லைனா நல்லாவே இருக்காது ! - ஸ்டோக்ஸ் வேதனை 3

இந்நிலையில், ராஜஸ்தான் அணியில் விளையாடி வரும் பென் ஸ்டோக்ஸ் தற்போது கொரோனா காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி கொடுக்கததால் வருத்தம் தெறிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஸ்டோக்ஸ் ” இந்தாண்டு ஐபிஎல்லில் விளையாடுவது மகிழ்ச்சி. ஐபிஎல் தொடரின் உயிர்நாடியே ரசிகர்கள் தான். போட்டியின் போது ரசிகர்கள் மத்தியில் விளையாடுவது தனி அனுபவம் என்றே கூறலாம். ஆனால் தற்போது கொரோனா காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி இருக்கிறாதா என்று எனக்கு தெரியவில்லை. இந்தாண்டு ஐபிஎல் ரசிகர்களுடன் நடத்தினால் சிறப்பாக இருக்கும்” என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

Miss you ipl fans...ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் நடந்தால் நல்லாவே இருக்காது ! - ஸ்டோக்ஸ் வேதனை 3

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 2017ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகினார். இவர் இதுவரை 42 போட்டிகளில் விளையாடி பேட்டிங்கில் 960 ரன்களும் பவுலிங்கில் 28 விக்கெட்களையும் வீழ்த்தி இருக்கிறார். 2017, 2018 ஐபிஎல் சீசனில் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட் அணியில் விளையாடினார். அதன்பிறகு தற்போது வரை ராஜஸ்தான் ராயல் அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *