14ஆவது ஐபிஎல் சீசன் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமலேயே வெளியேறி ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தினர். இதனால் இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்ற ஆகவேண்டும் என்று தீர்மானமாக இருக்கிறது.

அதற்காக ஏலத்தில் ராபின் உத்தப்பா, கிருஷ்ணப்பா கவுதம், மொயின் அலி போன்ற நட்சத்திர வீரர்களை தேர்வு செய்திருக்கிறது. தற்போது இவர்கள் எல்லாம் அணியுடன் இணைந்து தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். சிஎஸ்கே வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை சிஎஸ்கே தனது ட்விட்டரில் தினமும் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்காட் ஸ்டைரிஸ் இந்தாண்டு ஐபிஎல்லில் எந்தெந்த அணிகள் எந்த இடத்தை பிடிக்கும் என்று கணித்து தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார். இவரது இந்த கணிப்பு சிஎஸ்கே ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏன்னெறால் சிஎஸ்கே அணியை இவர் கடைசி இடத்தில் வைத்திருக்கிறார். அவரது கணிப்பில் மும்பை இந்தியனஸ் அணி தான் மீண்டும் கோப்பையை வெல்லும் என்று கூறியுள்ளார். இதன்பிறகு டெல்லி இரண்டாவது இடத்தையும், பஞ்சாப் அணி மூன்றாவது இடத்தையும் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.
ஸ்காட் ஸ்டைரிஸ் கணிப்பு
1.மும்பை இந்தியன்ஸ்
2.டெல்லி கேப்பிடல்ஸ்
3.பஞ்சாப் கிங்ஸ்
4.சன்ரைஸர்ஸ் ஐதராபாத்
5.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
6.ராஜஸ்தான் ராயல்ஸ்
7.கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
8.சென்னை சூப்பர் கிங்ஸ்

இதை பார்த்த ஐபிஎல் ரசிகர்கள் ஸ்டைரிஸை கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கினர். அதேபோல் சிஎஸ்கேவும் தனது ட்விட்டரில் ஏன் இப்படி பதிவிட்டீர்கள் ஸ்டைரிஸ் என்று கேட்டுள்ளனர். இதற்கெல்லாம் பதிலளித்த ஸ்டைரிஸ் “நான் செய்தது தவறு தான். சிஎஸ்கேவில் சிறந்த பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் இருப்பதை மறந்து இப்படி கூறிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
I consider myself reprimanded. Super coach @SPFleming7 has already told me off 🤣🤣🤣 pic.twitter.com/T0Sod0t58T
— Scott Styris (@scottbstyris) April 4, 2021