ஜடேஜா, ராஹானே பார்ட்னர்சிப்பை நொருக்கி தள்ளிய சுந்தர், ஷர்துல் தாகூர் பார்ட்னர்சிப் !
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி ஜனவரி 15ம் தேதியிலிருந்து பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிஸ்சில் அனைத்து விக்கெட்களை இழந்து 369 ரன்கள் குவித்துள்ளனர்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 111.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 336 ரன்கள் மட்டுமே குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி மூன்றாவது நாள் முடிவில் 6 ஓவர்கள் மட்டும் வீசி 21 ரன்கள் குவித்தது. இதில் வார்னர் 20 ரன்களும் ஹாரிஸ் 1 ரன்னும் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர்.

தற்போது அஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற இந்த மிகப்பெரிய தொடரில் பார்ட்னர்சிப்பில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற நான்காவது டெஸ்டில் 6 விக்கெட்களுக்கு பின் களமிறங்கிய ஷர்துல் தாகூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி உள்ளார்கள். இவர்கள் இருவரும் தனது அரைசதத்தை பூரத்தி செய்து 123 ரன்கள் பார்ட்னர்சிப்பில் குவித்துள்ளனர். இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரில் பார்ட்னர்சிப்பில் அதிக ரன்கள் அடித்த 2வது ஜோடியாக இருக்கின்றனர்.

சிட்டினியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில் புஜாரா மற்றும் பண்ட் ஜோடி சேரந்து 148 ரன்கள் பார்ட்னர்சிப்பில் குவித்து முதலிடத்தில் இருக்கிறார்கள். இதையடுத்து மெல்போர்னில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ரஹானே மற்றும் ஜடேஜா இணைந்து 121 ரன்கள் பார்ட்னர்சிப்பில் குவித்து மூன்றாவது இடத்தில் உள்ளனர். 2 ரன்கள் வித்தியாசத்தில் ஜடேஜா, ராஹானே பார்ட்னர்சிப்பை நொறுக்கி தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளனர் சுந்தர், ஷர்துல் தாகூர் பார்ட்னர்சிப். மூத்த வீரர்களின் சாதனையை பின்னுக்கு தள்ளிய இளம் வீரர்கள் என்று பலரால் போற்றப்படுகிறது.
The Shardul Thakur and Washington Sundar partnership comes to an end on 123, the second biggest of the series ? #AUSvIND pic.twitter.com/gTwAwMwMu3
— 7Cricket (@7Cricket) January 17, 2021