தலைவன் ஒருவனே; ஐபிஎல் தொடருக்கான தரமான ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் முன்னாள் வீரர் !! 1

ஐபிஎல் டி.20 தொடருக்கான தனது ஆல் டைம் சிறந்த ஆடும் லெவனை முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் 9ம் தேதி துவங்கி மே 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த தொடருக்காக மிக தீவிரமாக தயாராகி வருகின்றனர். வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் சிலர் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும்..? சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த போகும் வீரர்கள் யார் யார் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை ஓபனாக தெரிவித்து வருகின்றனர். அதே போல் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் யார் யாருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் அட்வைஸ் கொடுத்து வரும் முன்னாள் வீரர்கள், ஒவ்வொரு அணிக்குமான தங்களது ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர்.

தலைவன் ஒருவனே; ஐபிஎல் தொடருக்கான தரமான ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் முன்னாள் வீரர் !! 2

மற்ற முன்னாள் வீரர்கள் இந்த வருட தொடருக்கான ஒவ்வொரு அணிக்கும் தங்களது ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்து வரும் நிலையில், முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கரோ ஐபிஎல் தொடரின் தனது ஆல் டைம் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார்.

சுனில் கவாஸ்கர் தனது கனவு அணியின் கேப்டனாக சென்னை அணியின் கேப்டனும், முன்னாள் இந்திய வீரருமான தோனியையே நியமித்துள்ளார். துவக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் அதிரடி வீரர் கிரிஸ் கெய்லை தேர்வு செய்துள்ளார் சுனில் கவாஸ்கர்.

தலைவன் ஒருவனே; ஐபிஎல் தொடருக்கான தரமான ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் முன்னாள் வீரர் !! 3

மிடில் ஆர்டரில் டேவிட் வார்னர், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா மற்றும் டிவில்லியர்ஸை தேர்வு செய்துள்ள சுனில் கவாஸ்கர், ஆல் ரவுண்டர்கள் வரிசையில் ரவீந்திர ஜடேஜாவையும், பந்துவீச்சாளர்கள் வரிசையில் சுனில் நரைன், புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்ப்ரிட் பும்ராஹ் ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார்.

தலைவன் ஒருவனே; ஐபிஎல் தொடருக்கான தரமான ஆடும் லெவனை தேர்வு செய்துள்ளார் முன்னாள் வீரர் !! 4

அதே போல் 12வது வீரராக லசீத் மலிங்காவை தேர்வு செய்துள்ள சுனில் கவாஸ்கர், தான் யாராவது சிறந்த வீரரை விட்டிருந்தால் தன்னை மன்னித்து கொள்ளும்படியும் தெரிவித்துள்ளார். மேலும் தனது வாழ்வில் தான் ஒரு முறை கூட தேர்வாளராக இருந்தது இல்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள கவாஸ்கர் தேர்வாளர் வேலை எவ்வளவு சிரமமானது என்பதை தற்போது உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சுனில் கவாஸ்கரின் ஆல் டைம் சிறந்த ஆடும் லெவன்;

ரோஹித் சர்மா, கிரிஸ் கெய்ல், டேவிட் வார்னர், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ஏ.பி டிவில்லியர்ஸ், தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சுனில் நரைன், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ராஹ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *