உலககோப்பை தோல்விக்கு காரணம் இதுதான்: சுனில் கவாஸ்கர் பேச்சு! 1

விராட் கோலியை மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு கேப்டனாக தேர்வு செய்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி 2019 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்தத் தோல்வி இந்திய ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி மீதும் விராட் கோலியின் கேப்டன்ஷிப் மீதும் கேள்வி எழுந்தது. எனவே இந்திய கிரிக்கெட் அணி நாடு திரும்பியதும் உலகக் கோப்பை தொடரின் தோல்வி குறித்தும் விராட் கோலியின் கேப்டன்ஷிப் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. உலககோப்பை தோல்விக்கு காரணம் இதுதான்: சுனில் கவாஸ்கர் பேச்சு! 2

 

எனினும் இந்திய அணி நாடு திரும்பியதும் இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. இந்தத் தொடருக்கும் விராட் கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

 

அதில்,“தற்போது உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுவினர் நொண்டி வாத்தை போல் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் எவ்வாறு விராட் கோலியை மீண்டும் கேப்டனாக தேர்வு செய்தனர். ஏனென்றால் உலகக் கோப்பை தொடரில் சரியாக விளையாடாத கேதார் ஜாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் கேப்டன்ஷிப்பில் சரியாக சொபிக்கவில்லை. ஆகவே அவரை மட்டும் ஏன் இன்னும் கேப்டனாக வைத்துள்ளனர்.

 

அதேசமயம் எங்களுக்கு தெரிந்த வரை விராட் கோலியின் கேப்டன் பதவிக்காலம் உலகக் கோப்பை தொடர் வரைக்கும் மட்டுமே இருந்தது. அப்படி இருக்கும் போது கேப்டன் தேர்வு குறித்து கூட்டமே நடத்தாமல் எவ்வாறு விராட் கோலியை மீண்டும் கேப்டனாக அறிவித்தார்கள். ஆகவே, கோலி தற்போது தேர்வுக்குழுவின் விருப்பத்தால் கேப்டனாக இருக்கிறாரா அல்லது அவரின் விருப்பத்தால் கேப்டனாக இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

உலககோப்பை தோல்விக்கு காரணம் இதுதான்: சுனில் கவாஸ்கர் பேச்சு! 3

மேலும் தற்போது இருக்கும் தேர்வுக்குழுவின் கடைசி அணி தேர்வு இதுவாகவே இருக்கும். ஏனென்றால் கூடிய விரைவில் இந்திய அணி தேர்வுக்கு புதிய குழு அமைக்கப்படும். எனவே இனிமேல் அமைக்கப்படும் தேர்வுக்குழுவிலாவது ஏற்ற நபர்கள் இருக்கவேண்டும். அப்போது தான் அவர்கள் தேர்வு செய்யும் அணியை வைத்து விளையாடவேண்டும் என்று அணி நிர்வாகத்திற்கு வலியுறுத்த முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவில் எம்.எஸ்.கே பிரசாத், சரண்தீப் சிங், தேவங் காந்தி, ஜட்டின் பிராஞ்பே மற்றும் ககன் கோடா ஆகியோர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

மேலும் உலககோப்பை தொடரின் தோல்வி குறித்து பேசிய அவர்…

இந்தியாவில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை நம்பியே இருந்தது. மேலும் ஒரு இக்கட்டான கட்டத்தில் நமக்கு தோனி போன்ற ஒரு அபாரமான அனுபவம் வாய்ந்த வீரர் தேவை. ஆனால் நாம் அந்த இடத்தில் பாண்டியா மற்றும் ரிஷப் பண்ட் அஆகியோரை இறக்கி ஆட்டத்தை தொலைத்துவிட்டோம் இதுதான் தோல்விக்கு காரணம் என்று பேசியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *